• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ராத்திரிகளில்.. மனைவிகளை தூங்க விடாமல் "டார்ச்சர்" செய்த கணவன்கள்.. எகிறி தப்பிய "விஐபி"

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில், மனைவிகளை மாற்றி கொண்ட உல்லாச வழக்கில், மேலும் 5 பேர் கைதாகி உள்ளனர்.. அத்துடன், இது தொடர்பாக பல்வேறு பரபரப்பான செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் போலீசுக்கு சென்றதால்தான் இப்படி ஒரு விஷயமே வெளியே தெரியவந்தது.

தன்னுடைய கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாகவும், அவரிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் புகார் கூறியிருந்தார்..

தப்பு பண்ணிட்டீங்களே சித்தார்த்.. விசாரணையை தொடங்கிய சென்னை போலீசார்.. பிடி இறுகுகிறதா?தப்பு பண்ணிட்டீங்களே சித்தார்த்.. விசாரணையை தொடங்கிய சென்னை போலீசார்.. பிடி இறுகுகிறதா?

 உல்லாசம்

உல்லாசம்

ஆனால், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. முதல்கட்டமாக ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைதானார்கள்.. இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்தான், கப்பிள்ஸ் மீட் என்ற குரூப் பற்றி தெரியவந்தது..

 20 க்ரூப்கள்

20 க்ரூப்கள்

ஃபேஸ்புக் டெலிகிராம் போன்றவற்றில் இந்த குழுவை ரகசியமாக தொடங்கி அதில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை சொன்னார்கள்.. கணவர், மனைவி இருவருமே தங்களது விருப்பத்துடனும், கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள் என்றும், சிலநேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும், லாட்ஜ்களிலும், சந்தித்து மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பார்கள் என்ற பகீர் விஷயங்களும் வெளிவந்தன.

 கண்காணிப்பு

கண்காணிப்பு

இப்போது இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. மனைவிகளை இப்படி மாற்றிக்கொள்ளும் கும்பலுடன் தொடர்புடைய 14 சோஷியல் மீடியா குழுக்களை போலீசார் கண்காணித்து வருகிறார்களாம்.. இந்த குழுவில் பல்வேறு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இணைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு க்ரூப்பிலும் குறைந்தது 2,000 தம்பதிகள் ஆக்டிவ்வாக இருந்துள்ளனர்..

 மனைவிகள்

மனைவிகள்

அதுமட்டுமல்ல, இந்த வழக்கை மனோரீதியாகவும் பார்க்கப்படுகிறது.. சாதாரண மன நிலையோடு இருப்பவர்கள் இப்படி மனைவிகளை மாற்றிக்கொண்டு, உடலுறவில் ஈடுபடுத்தி கொள்ளும் முடிவுக்கு வர மாட்டார்களாம்.. தன் இயல்பில் இருந்து மாறுபட்டவர்களாலேயே, தங்கள் மனைவியை இன்னொருவருக்கு விலைபேச முடியும் என்பதால், அநேகமாக இந்த கும்பல் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறதா? என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.. இன்னும் சொல்ல போனால், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு நேரடியாக இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்..

 விசாரணை

விசாரணை

இதனடிப்படையில்தான் தற்போது மேலும் 5 பேர் கைது கைதாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. இவர்களிடமும் விசாரணை விரைவில் நடக்க உள்ளது.. இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு முக்கிய புள்ளி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டாராம்... அவர் யார் என்று தெரியவில்லை.. அவரையும் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கையை கேரள போலீசார் எடுத்து வருவதாக சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும், இந்த சம்பவத்திற்கு பின்னால், ஒரு மிகப்பெரிய கும்பல் இருப்பதும், அதில் சில அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்..

 குற்றவாளிகள்

குற்றவாளிகள்

குறிப்பாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. இந்த கும்பல், அந்த ஒரே ஒரு புள்ளியை தொடர்பு கொள்ள டெலிகிராம், மெசஞ்சர் போன்ற ஆப்களை பயன்படுத்தி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த முக்கிய புள்ளி, 20 ஆன்லைன் குரூப்களிலும் உறுப்பினராக இருக்கிறாராம்.. போலீசில் முதல்கட்டமாக 7 பேர் சிக்கி கொண்டதையடுத்து, தொடர்ந்து ஒவ்வொருவராக அந்த ஆன்லைன் குழுக்களில் இருந்து விலக ஆரம்பித்துள்ளனராம்.

 மிரட்டல்

மிரட்டல்

இதனிடையே, இந்த பிரச்சனையை போலீசுக்கு முதன்முதலில் கொண்டு சென்ற பெண்ணின் சகோதரர் மேலும் சில தகவல்களை தெரிவிக்கிறார்.. தன்னுடைய சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க அவர் கூறுகிறார்.. இன்னொருவருடன் உடலுறவு கொள்ள மனைவியை கணவர் சம்மதிக்க செய்வாராம்.. ஒருவேளை தன் விருப்பத்துக்கு மனைவி சம்மதிக்கவில்லையானால், குழந்தைகளை கொன்று விடுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் என்றெல்லாம் சகோதரியை அந்த கணவர் மிரட்டுவாராம்..

 குழந்தைகள் உயிர்

குழந்தைகள் உயிர்

அதாவது அடித்து கொடுமைப்படுத்துவதற்கு பதிலாக மனரீதியான டார்ச்சரையே அவர் ஆயுதமாக கையில் எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.. குழந்தைகளின் உயிர் பறிபோய்விடுமோ என்று பயந்து, கணவரின் சொல்லும் மனைவி கீழ்ப்படிந்து வந்தாராம்.. அதிலும் ஒவ்வொரு இரவும் குழந்தைகள் தூங்கியபிறகுதான், மற்றவர்களுடன் உடலுறவு வைத்து கொள்ள கணவர் வற்புறுத்தி வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

English summary
partner swapping: Kerala cops arrest five more men in wife swap case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X