திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலை பெண்கள் நுழைவது குற்றம்.. மீறினால் அபராதம்... சட்டம் கொண்டு வருவோம் என காங். வாக்குறுதி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம் வயது பெண்கள் நுழை தடை விதிக்கப்படும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்காக தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தை போல் கேரளாவிலும் இன்னும் ஒரிரு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி செய்து வருகிறார்கள்.

 penalty to overrule Sabarimala women entry: Congress promises law

சபரிமலை விவாகரத்தில் இடதுசாரிகள் அரசு முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பெண்களை நுழைய அனுமதி அளித்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது. பெரும் போராட்டம் வெடித்தது. அதன்பிறகு சபரிமலையில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்டஅமர்வு முன்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த அமர்வு அளிக்கும் தீர்ப்பை அமல்படுத்துவது என இடதுசாரிகள் அரசு முடிவில் உள்ளது.

இதனிடையே காங்கிரஸ் தலைமையிலனா கூட்டணி தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோயிலின் மரபுகளை மீறுவது 'குற்றம்" என்று சட்டம் கொண்டுவருவோம். 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வர தடை விதிப்போம். மீறினால் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வருவோம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

English summary
The Congress party released a draft of the proposed legislation even as the LDF government finds itself again in a bind over the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X