திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனிமே என்ன? தெருவுல இறங்குவோம் வாங்க.. சபரிமலை போராட்டத்திற்கு பினராயி பதிலடி!

சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை போராட்டத்திற்கு பினராயி விஜயன் பதிலடி!- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

    புகழ்பெற்ற கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்கள் நுழைவிற்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து வருகிறது.

    ஆனால் இப்போது வரை அங்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு பதட்டமான சூழ்நிலைதான் நிலவிவருகிறது.

    [கடைசியில் கேரளாவிற்கும் இந்த நிலைமையா?.. உ.பி, பீகாரில் நடந்த அதே அரசியல்.. சபரிமலை போராட்டம்! ]

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    கேரளா சபரிமலை போராட்டம், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொஞ்சம் எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு வாரமாக நடந்த போராட்டம், விவரிக்க முடியாத எழுச்சி ஒன்றை கேரளாவில் உருவாக்கி உள்ளது. சபரிமலைக்காக பல மக்கள் இப்படி ஒன்றுகூடுவார்கள் என்று யாருமே நினைக்கவில்லை.

    எந்த கவலையும் இல்லை

    எந்த கவலையும் இல்லை

    ஆனால் பினராயி விஜயன் இதை எல்லாம் கண்டுகொண்டது போல தெரியவில்லை. உறுதியாக, என்ன நடந்தாலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார். மேலும் எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் முடிவிற்கு வந்துவிட்டார்.

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

    இந்த நிலையில்தான் நேற்று பெரிய அளவில் போராட்டமும், கலவரமும் சபரிமலையை சுற்றிய பகுதிகளில் நடந்தது. மிகப்பெரிய கலவரமாக மாற இருந்த போராட்டத்தை பினராயி விஜயன் சாமர்த்தியமாக கையாண்டார். தூத்துக்குடி போராட்டம் போல தவறான ஆணைகளை அங்கு ''வட்டாச்சியர்'' வழங்கவில்லை. அதே சமயம் போராட்டக்காரர்களை தேவைப்படும் சமயங்களில் ''லத்தி சார்ஜ்'' கொடுத்து அடக்கியும் வைத்தார்கள். பெரிய கலவரமாக மாற வேண்டியதை ஒருவழியாக சமாளித்தனர்.

    வாங்க போய் பேசலாம்

    வாங்க போய் பேசலாம்

    இந்த நிலையில், இந்த போராட்டம் கலவரம் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்க முடிவெடுத்துள்ளார் பினராயி விஜயன். இந்த மாத இறுதியில் இடதுசாரி அமைப்புகள் கேரளா முழுக்க சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்தும் பெண்கள் உரிமை குறித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளது. இதில் முன்னின்று நடத்த போவதே முதல்வர் பினராயிதான். கேரளா முழுக்க, மாவட்டம் மாவட்டமாக சென்று இந்த தீர்ப்பு குறித்து மக்களிடம் பேச இருக்கிறார்கள். இது மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பதிலாக இருக்கும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.

    English summary
    Kerala CM Pinarayi plans to ''GIVE IT BACK'' for Sabarimala row in his own way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X