சபரிமலை தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இவ்வழக்கை மாற்றி உள்ளது.

மேலும் சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உத்தரவுக்கும் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் இத்தீர்ப்பு தொடர்பாக திருவனந்தபுரத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக விளக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஏனெனில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!