திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள், பத்திரிகையாளர்களை தாக்கிய கும்பல்.. பினராயி வருத்தம்.. ஆர்எஸ்எஸ் மீதும் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்கள், பத்திரிகையாளர்களை தாக்கிய கும்பல்.. பினராயி விஜயன் வருத்தம்..

    திருவனந்தபுரம்: சபரிமலையை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் போராட்டக்களமாக்கி வருகின்றனர் என்றும் பெண்கள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

    சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் தேவசம் போர்டும் தெரிவித்துவிட்டது. ஆனால் சில அமைப்புகள் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

    [சபரிமலை உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரும் சீராய்வு மனுக்கள்.. விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்]

    கடுமையாக தாக்குதல்

    கடுமையாக தாக்குதல்

    கடந்த வாரம் ஐப்பசி மாத பிறப்பை அடுத்து ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது சபரிமலைக்கு வந்த பெண்கள், பெண் செய்தியாளர்கள் என கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கேரளா நிறைவேற்றும்

    கேரளா நிறைவேற்றும்

    5 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு பெண் கூட அனுமதிக்கப்படாமல் நடை நேற்றுடன் மூடப்பட்டது. இந்து அமைப்புகளின் போராட்டம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா நிறைவேற்றும்.

    போராட்டக்களமாக்கும் ஆர்எஸ்எஸ்

    போராட்டக்களமாக்கும் ஆர்எஸ்எஸ்

    பெண் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்தது. சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களை அரசோ, போலீஸோ தடுக்கவில்லை. சபரிமலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் போராட்டக்களமாக்கி வருகிறது.

    தாக்குதல்

    தாக்குதல்

    சபரிமலையில் இருந்து கிரிமினல்கள் வெளியேற்றப்படுவார்கள். கேரள வரலாற்றில் இல்லாத அளவுக்கு செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    வருத்தம்

    வருத்தம்

    வாகனங்களில் சென்ற பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் வழிமறித்து தாக்கினர். பெண்கள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பினராயி விஜயன்.

    English summary
    Kerala CM Pinarayi Vijayan condemns RSS about protest in Sabarimala and attack on Women and female Journalists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X