திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது ஏன் பினராயி விஜயன் எப்பவுமே "உர்"ருன்னு இருக்கார்.. சிரிக்கவே தெரியாதா.. அவரே சொன்ன "நச்" பதில்

பினராயி விஜயன் சபா டிவிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அது ஏன் பினராயி விஜயன் எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு இருக்கார்? அவருக்கு சிரிக்கவே தெரியாதா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வரும் ஒன்றுதான்.. ஆனால் இவைகளுக்கெல்லாம் கேரள முதல்வரே நச்சென பதில் சொல்லி உள்ளார்... அதை பற்றின செய்திதான் இது!

Recommended Video

    எளிமையான முறையில் நடந்த Pinarayi Vijayan மகள் மறுமணம்

    எப்போதுமே கேரளா எல்லாவற்றிலும் ஸ்பெஷல்தான்.. எத்தனை விமர்சனங்கள் அந்த மாநிலத்தின் மீது முன்வைக்கப்பட்டாலும் பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக இருந்து கொண்டே இருக்கிறது என்பதை நாம் ஏற்று கொண்டே ஆக வேண்டும். அதனால்தான் நாட்டு மக்கள் கேரளாவின் ஒவ்வொரு அசைவையும் உற்று கவனித்தபடியே உள்ளனர்.

    திடீரென யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. அந்த மாநிலம் பல பிரச்சனையில் அடுத்தடுத்து சிக்க தொடங்கியது.. ஒழிந்துபோன கொரோனா மறுபடியும் வந்துவிட்டது.. நிபா வைரஸ், நிலச்சரிவு, வெள்ளம் இப்படியாக சவால்களை மீறி கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது அந்த மாநிலம்.

    Coronavirus: வாய் கொப்பளித்து துப்பும் தண்ணீரையும் சோதிக்கலாம்.. புதிய ஆய்வு!!Coronavirus: வாய் கொப்பளித்து துப்பும் தண்ணீரையும் சோதிக்கலாம்.. புதிய ஆய்வு!!

     புதிய முயற்சி

    புதிய முயற்சி

    இவைகளுக்கு நடுவில்தான் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது.. அதாவது நாட்டிலேயே முதல் முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது... அந்த சேனலுக்கு பெயர் "சபா டிவி".. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த சேனலை தொடங்கி வைத்தார்.. இந்த சட்டப்பேரவைக்கான வெப்சைட்டும் தனியாக தொடங்கப்பட்டுள்ளது.

     சட்டசபை

    சட்டசபை

    பொதுவாக நமக்கு, மத்திய அரசுக்கு லோக்சபா டிவி சானல் சேனல் இருக்கிறதே தவிர, மாநிலங்களிலுள்ள சட்டசபைகளில் நடக்கும் விவாதங்கள், உறுப்பினர்களின் பேச்சுகளை ஒளிபரப்ப, தனியாக சேனல் ஒன்று கிடையாது.. முன்பெல்லாம் சட்டசபை கூடினால், அன்றைய நிகழ்வுகள் குறித்த செய்திகள் நியூஸ் பேப்பரில் பிரத்யேகமாக வெளியாகும்.

     செய்திதாள்கள்

    செய்திதாள்கள்

    கேள்வி-பதில், மான்ய கோரிக்கை மீதான விவாதம் என்றாலும்கூட, அதை தனியாக பிரசுரிக்கப்படும். அதற்கு பிறகுதான் சேனல்கள் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், நிகழ்வுகளை வெளிக்காட்ட தொடங்கியது. இப்போது அடுத்த கட்டத்துக்கு கேரளா சென்றுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது.. மொத்த நிகழ்வுகளையுமே மக்கள் பார்க்கும்படி வகை செய்ய பினராயி நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

     ஸ்பெஷல் பேட்டி

    ஸ்பெஷல் பேட்டி

    இந்நிலையில்தான், பினராயி விஜயன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு ஸ்பெஷலாக பேட்டி ஒன்று தந்துள்ளார்.. அதாவது, இவர் ஆட்சிக்கு வந்த பிறகு டிவி அல்லது பத்திரிகைகளுக்கு கூட்டாக தான் பேட்டி தந்து வந்தார்.. இப்படி ஒரு சேனலுக்கு இதற்கு முன்பு பேட்டியே தந்தது இல்லை. சபா டிவியில் பினராயியுடன் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது.. அந்த நேர்காணலை நடத்தியவர் யார் என்றால், காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில துணை தலைவரும் எம்எல்ஏ-வுமான விடி சதீசன் என்பவர்தான்... அப்போது நிறைய கேள்விகள் பினராயியிடம் கேட்கப்பட்டது.

     மீடியாக்கள்

    மீடியாக்கள்

    அதில் ஒரு கேள்விக்கு பினராயி பதில் சொல்லும்போது, "நான் ரொம்ப வருஷமாகவே இந்த பொது வாழ்க்கையில் இருக்கேன்.. எம்எல்ஏவா இருந்தபோதெல்லாம் என்னை பற்றி அவ்வளவா யாருக்கும் தெரியாது.. ஆனால், மாநில அளவிலான பொறுப்பை எட்டிய பிறகுதான், மீடியாக்களை கையாள வேண்டிய நிலைமை வந்தது.

     ஆதங்கம்

    ஆதங்கம்

    அப்போ சில சில விஷயங்களில் கடுமையாக பேச வேண்டிய நிலைமையும், சூழலும் வரும்.. அந்த மாதிரி நேரத்தில், அந்த கோபத்தையும், ஆதங்கத்தையும் மறைத்துவைத்துவிட்டு, ஒரு சிரிப்பு சிரித்து பதில் சொல்வது எனக்கு பழக்கமில்லை.. கோபம் வந்தால் கோபம்.. சிரிப்பு வந்தால் சிரிப்புதான்.. அப்படி நான் கோபத்துடன் இருக்கும் போட்டோ, வீடியோக்கள்தான் மீடியாவில் நிறைய ஒளிபரப்பாயின.. ஆனால் என்னுடன் நெருக்கமாக இருக்கறவங்களுக்குதான் தெரியும் என் இயல்பான குணம்.

     சிரித்த முகம்

    சிரித்த முகம்

    இயற்கையாகவே, சிரித்த முகத்துடன் இருக்கக்கூடிய என் போட்டோக்கள் ரொம்ப குறைவுதான். சிலர் எப்ப பார்த்தாலும் சிரிச்சிட்டே இருப்பாங்க.. ஆனால் நான் அவசியத்துக்கு மட்டும் சிரிக்கும் ஆள்.. எப்போதும் சிரிக்கும் பழக்கம் எனக்கு இல்லை... இதற்கு நான் வளர்ந்துவந்த முறையும் காரணமாக இருக்கலாம்"என்றார்.

     ஆச்சரியம்

    ஆச்சரியம்

    இப்படி ஒரு விளக்கத்தை பினராயி சொல்வது அம்மாநில மக்களுக்கே வித்தியாசமாக இருக்க செய்யும்.. இருந்தாலும் நமக்கு என்னவோ, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி முதல்வரை, எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ பேட்டி எடுத்ததுதான் ஆச்சரியமாகவே இருக்கிறது.. இப்படிப்பட்ட ஆரோக்கிய அரசியலின் அதிசயத்தை கேரளா தவிர வேற மாநிலங்களில் பார்க்க முடியாது என்பதும் நிஜம்தான்!

    English summary
    pinarayi vijayan conversation with congress mla in sabha tv
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X