வீடு முழுக்க போதை மருந்துகள்.. கேரள நடிகை சஹானா சாவில் மர்மம்?.. கொடூர கணவர்?.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: மாடல் நடிகை சஹானா வீட்டில் இருந்து போதை பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
கேரளாவில் பிரபல நடிகை சஹானா. இவர் மாடல் அழகியாகவும் உள்ளார். இவருக்கு வயது 20. இவர் கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் கணவர் சாஹத்துடன் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது.
ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!

சஹானா
சஹானா தமிழ் திரைப்படம் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டு ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த கேரள போலீஸார் சஹானாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஓராண்டு
திருமணமாகி ஓராண்டு காலமே ஆவதால் அவரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவர் மீது பலர் சந்தேக கணைகளை எழுப்புகிறார்கள், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சஹானா மரணம்
வளர்ந்து வரும் நடிகையான சஹானா மரணத்தால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பணத்திற்காக கணவர் சாஹத், சஹானாவை கொன்றிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து சஹானாவின் அம்மா உவேமா கூறுகையில், சஹானா தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக எங்கள் வீட்டுக்கு வருவதாக கூறினார்.

தாய் கண்ணீர்
அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தார். எனவே அவர் தற்கொலை செய்திருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு சஹானாவை அவரது தாய் வீட்டுக்கு செல்ல சாஹத் அனுமதிக்கவே இல்லை. போனில் பேசவும் கூட விட மாட்டார் என கண்ணீர் மல்க அவரது தாய் தெரிவித்தார். சஹானாவின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போது மரிஜூவானா, எம்டிஎம்ஏ மற்றும் எல்எஸ்டி உள்ளிட்ட போதை பொருட்களை கண்டறிந்தனர். இதையடுத்து அவரது உடம்பில் போதை பொருள் இருக்கிறதா என்பதை அறிய அவரது உடலில் சோதனை நடத்தப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.