• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன?.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்

|
  243 Passengers missing in kerala | கேரள கடற்கரையில் காணாமல் போன 243 பேர்,அதிரவைக்கும் காரணம்- வீடியோ

  திருவனந்தபுரம்: கேரள கடற்கரையில் காணாமல் போன 243 பேரையும் கடத்தல்காரர்கள் கடத்தியிருக்கலாம் என போலீஸார் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.

  கடந்த ஜனவரி 12-ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியிலிருந்து 2,2670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் காலனிக்கு தேவமாதா எனப்படும் மீன்பிடி படகில் 243 பேர் பயணம் செய்துள்ளனர்.

  இவர்களுள் 243 பேர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர்கள். 150 நாட்கள், அதாவது 5 மாதமாகியும் இவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. 243 பேரின் நிலை குறித்து தெரியாமல் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

  கண்டெடுக்கப்பட்டது

  கண்டெடுக்கப்பட்டது

  இதுகுறித்து கேரள போலீஸார் கூறுகையில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி கொச்சி அருகே உள்ள முனம்பம் பகுதியில் 50 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே மேலும் ஏராளமான பைகளும், அடையாள அட்டைகளும், சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களின் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் மர்மமாக இருந்தது.

  கடத்தல்

  கடத்தல்

  படகில் பயணம் செய்த போது லக்கேஜ் அதிகமாக இருந்ததால் படகோட்டிகள் பேகுகளை கரையில் வைத்துவிட்டு வர கூறியிருந்திருப்பர் என முடிவுக்கு வந்தோம். இந்த பைகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்புகிறோம்.

  ஆசை வார்த்தைகள்

  ஆசை வார்த்தைகள்

  கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட ஸ்ரீகாந்தன், செல்வன் ஆகியோர்தான் இந்த கடத்தலுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகள் கூறுகின்றன. 10 புரோக்கர்களும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளனர். இந்த புரோக்கர்கள் தமிழகம் மற்றும் டெல்லியை சேர்ந்தவர்கள். 243 பேரும் படகை விட்டு இறங்கியவுடன் இந்த புரோக்கர்கள் நியூஸிலாந்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடம் இருந்து பணத்தை சுருட்டியிருப்பர்.

  புரோக்கர்

  புரோக்கர்

  இதுவரை 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களுள் டெல்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரபு தண்டபாணி, ரவி ராஜா. தண்டபாணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் சென்னையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேவமாதா என்ற படகை புரோக்கர் ஒருவர் வாங்கி அதை மாற்றி அமைத்துள்ளார்.

  பாதிக்கப்பட்ட குடும்பம்

  பாதிக்கப்பட்ட குடும்பம்

  அதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்யும்படியான அளவுக்கு இடம் இல்லை. எனவே படகு மூழ்கியிருக்க வாய்ப்பில்லை என்றனர். பேராசை, அதிக பணத்தாசை, சொகுசு வாழ்க்கை ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டதால் தற்போது என்னவாயிற்று. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  வெளிநாட்டு தகவல்

  வெளிநாட்டு தகவல்

  இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்டர்போல் அதிகாரிகளும் ப்ளூ கார்னர் நோட்டீஸை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த நோட்டீஸ் கொடுத்த பிறகு 243 பேர் குறித்து வெளிநாடுகளிலிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே வெளிநாடுகளிலிருந்து தகவல்கள் வரும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

   
   
   
  English summary
  There was a possibility of human trafficking in the incident which 243 members of Kerala went missing in coast.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X