திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளத்தில் கனமழை.. அந்தரத்தில் கயிறு கட்டி 8 மாத கர்ப்பிணியை மீட்ட மீட்பு பணியினர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 8 மாத கர்ப்பிணியை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஆறுகள் நிரம்பி வருகிறது.

பாலக்காடு, இடுக்கி,வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் மேற்கண்ட மாவட்டங்களை சுற்றிலும் நீர் தேங்கியுள்ளது.

சிக்கிக் கொண்ட 5 பேர்

சிக்கிக் கொண்ட 5 பேர்

பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடியில் பவானி ஆற்றின் கரையோரம் 5 உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பத்தினர் கரைக்கு அந்த பக்கம் சிக்கிக் கொண்டனர்.

மறு கரை

மறு கரை

அவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் அவர்களால் வெளியே முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் ஒரு கரையிலிருந்து மறு கரையிலிருந்து மரத்தில் கயிற்றை கட்டினர்.

8 நிமிடங்கள்

8 நிமிடங்கள்

அந்த கயிற்றின் மூலம் ஒன்றரை வயது குழந்தையையும் அவரது தந்தையையும் மீட்டனர். பின்னர் அங்கிருந்து ஒவ்வொருவராக கயிற்றின் மூலம் அந்தரத்தில் நகர்ந்து கொண்டே வந்தனர். அது போல் 8 மாத கர்ப்பிணி ஒருவரும் கயிற்றை கடந்து வந்தார். இவர் ஒரு கரையிலிருந்து மறு கரை செல்ல 8 நிமிடங்கள் ஆனது.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

இதில் குழந்தையின் தந்தைக்கு சில நாட்களுக்கு முன்புதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மறுகரையில் மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

English summary
Pregnant Woman rescued across the Bhavani river in Attappadi, Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X