திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலியல் வழக்கில் சிக்கிய பிரான்கோவிற்கு எதிராக போராடிய பாதிரியாருக்கு எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய பாதிரியார் பிரான்கோ முலக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்திய
பாதிரியாருக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் பாதிரியார் பிரான்கோ முலக்கலுக்கு எதிராக கன்னியாஸ்திரிகளை ஒருங்கிணைத்து, 'Save Our Sisters' என்ற பெயரில், பதாகைகளை ஏந்தி தலைமைச் செயலகத்திற்கு வெளியே, பாதிரியார் அகஸ்டின் வாட்டோலி போராட்டம் நடத்தினர்.

Priest Protest Against Rape, Catholic priest given a warning

இந்தநிலையில், சர்ச்சின் விதிப்படி, கன்னியாஸ்திரிகளை ஒருங்கிணைத்தது தவறு என்றும், அதே நேரம் கத்தோலிக்க சர்ச்சின் நம்ப தன்மைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி விடும் என பாதிரியார் அகஸ்டின் வாட்டோலிக்கு எர்னாகுளம்-அங்கமாளி மேஜர் அர்கேபாடி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை மீறி போராட்டம் நடத்தப்பட்ட விவகாரத்தில் அவருக்கு கத்தோலிக்க சர்ச் விளக்கம் கேட்டு உள்ளதோடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, பாதிரியார் பிரான்கோ முலக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்தது. ஆனால், பிரான்கோ இந்த குற்றச்சாட்டை மறுத்தார். பல விளக்கங்களை அளித்தார். எனினும், வழக்கு தொடரப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி, பாதிரியார் பிரான்கோவை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்னர், 3 வாரங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திரும்பவும் சர்ச்க்கு பிரான்கோ முலக்கல் வந்த போது, அவரின் ஆதரவாளர்கள் மலர்தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பாலியல் விவகாரம் தொடர்பாக, வாடிகனுக்கும் கன்னியாஸ்திரி புகார் அளித்ததன் அடிப்படையில், ஜலந்தர் சர்ச்சின் பதவியில் இருந்து பாதிரியார் பிரான்கோ முலக்கல் விலகினார். இந்த நிலையில் பிரான்கோ முலக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாதிரியார் கஸ்டின் வாட்டோலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
A priest in Kerala who organised protests, powerful Catholic priest was given a warning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X