• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பதறிய பிரியங்கா.. தன் துப்பட்டாவை தந்து.. பெண் வேட்பாளரை இறுக கட்டிப்பிடித்து.. அப்டியே இந்திராதான்

|

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.. அந்த வகையில் பிரச்சாரத்தின்போது, எதேச்சையாக நடந்த 2 சம்பவங்கள் அம்மாநில மக்களை உற்றுகவனிக்க வைத்தும் வருகிறது.

நம்மை போலவே, கேரளாவுக்கும் இது முக்கியமான தேர்தல்.. கம்யூனிஸ் பலமாக இருந்தாலும், பாஜக இந்த முறையும் கால் ஊன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், கேரள மாநிலம் காயங்குளம் தொகுதியில், பிரியங்கா காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார். காயங்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரிதாவை ஆதரித்து பிரியங்கா இந்த பிரச்சாரத்தை செய்தார்.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

சில சமயங்களில் வேட்பாளர்கள் ஒரு ஓரமாக நிற்கவைத்து, அவர்களுக்காக தலைவர்கள் மற்றொரு புறம் தனியாக நின்று வாக்கு சேகரிப்பார்கள்.. ஆனால், பிரியங்கா அப்படி செய்யவில்லை.. வேட்பாளர் அரிதாவையும் தன்னுடைய பிரச்சார வேனில் ஏற்றிக் கொண்டார்.. அவருடன் கேஷூவலாக பேசினதார்.. அரிதாவின் குடும்பம், பெற்றோர் பற்றியெல்லாம் விசாரித்தவர் வீடு எங்கே? என்று பிரியங்கா கேட்டார்..

பிரியங்கா

பிரியங்கா

உடனே அரிதாவும். பக்கத்துலதான்.. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு என்று சொல்லவும், உடனே பிரியங்கா வண்டியை அரிதா வீட்டுக்கு விடும்படி சொன்னார்.. இதை அரிதாவே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அரிதாவின் வீடு பூட்டி இருந்தது.. அந்த நேரம் பார்த்து, அவர்களுடைய பெற்றோர் இருவரும், பிரியங்காவை பார்க்க, கிருஷ்ணாபுரம் ரோட்டில் கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்திருக்கிறார்கள்..

செல்பி

செல்பி

உடனே உடனே அரிதா விஷயத்தை போனில் சொல்லவும் பெற்றோர் உடனடியாக கிளம்பி வந்தனர்.. கதவும் பூட்டியிருந்ததால், அவர்கள் வரும்வரை அந்த வீட்டுக்கு வெளியிலேயே பிரியங்கா கிட்டத்தட்ட 10 நிமிஷத்துக்கு மேலாக காத்து கிடந்தார்.. பெற்றோர் வந்ததும் கதவை திறந்தனர்.. பிரியங்கா கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசி கொண்டிருந்துவிட்டு,செல்பியையும் எடுத்தும் கொண்டார். அரிதாவின் அப்பாவுக்கு இதில் ஏகப்பட்ட சந்தோஷம்.. அவர் இந்திரா காலத்தில் இருந்தே தீவிரமான காங்கிரஸ் தொண்டராம்..!

விளக்கு

விளக்கு

அதேபோல இன்னொரு சம்பவம்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்கு பிரியங்கா சென்றார்.. ஆனால் நேரம் ஆகிவிட்டது.. சாயங்காலம் நடை சாத்தும் வேளையில் பிரியங்கா வந்தார்.. அந்த நேரத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.. அப்போது கூட்ட நெரிசலில் வட்டியூர்காவு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீணா எஸ்.நாயரும் நின்று கொண்டிருந்தார்.. விளக்கின் பக்கத்தில் அவர் நின்று கொண்டிருந்ததால், எதிர்பாராத விதமாக, அவரது டிரஸ்ஸில் தீப்பிடித்து கொண்டது..

வீணா

வீணா

உடனடியாக அங்கிருந்த செக்யூரிட்டிகள் இதை பார்த்து, தீயை அணைத்தனர்.. இதில் வீணா அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.. இதை பார்த்து பிரியங்கா, உடனே வீணாவை அணைத்து ஆறுதல் சொல்லி, தைரியம் சொன்னார்.. பிறகு, அங்கிருந்து ஆளுக்கு ஒரு காரில் கிளம்பி செல்லும்போது, வழியில் மக்கள் திரண்டிருந்தனர்.. அவர்களை பார்க்கும்படி வீணாவை பிரியங்கா அழைத்துள்ளார்.. ஆனால், வீணா டிரஸ் முழுக்க தீயில் எரிந்து விட்டிருந்தது.. இதை பார்த்த பிரியங்கா உடனே தன்னுடைய சுடிதாரின் துப்பட்டாவை டக்கென எடுத்து வீணாவுக்கு தந்து மேலே போர்த்திக் கொள்ளும்படி சொன்னார்.. இதை கேட்டதும் வீணாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது... இப்படி ஒரே நாளில் பிரியங்காவின் பிரச்சாரம் கேரளாவில் பேசுபொருளாகிவிட்டது.

குணங்கள்

குணங்கள்

அப்படியே இந்திராவை போலவே மக்களிடம் நெருங்கும் பழக்கம், பிரியங்காவிடமும் இருப்பதாக கருதப்படுகிறது.. பாட்டியின் தோற்றமும், நிதானமும், பொறுமையும் பிரியங்காவிடம் இருப்பதாக ஏற்கனவே பலர் சொல்லி வருகிறார்கள். அதே சுறுசுறுப்பு,.. அதே ஸ்மார்ட்.. இந்திராவை போல, மக்களுக்கு மீது ப்ரியம்.. சாமான்ய மக்களுடன் எளிதாக பேசுவது.. முகத்தில் ஒரு தெளிவு, உறுதிப்பாடு, வேகமாக பேசும் திறன்.. என இந்திராவின் குணங்கள் பெரும்பாலும் பிரியங்காவிடம் இருப்பதை காண முடிகிறது..

  தமிழகம் வருகை தரும் Priyanka Gandhi.. பின்னனியில் முக்கிய காரணம்
  பதற்றம்

  பதற்றம்

  பலம் பொருந்தி வரும் பாஜகவுக்கு பிரியங்காவின் இந்த செயல்பாடு, மாற்றாக இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும்.. காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தெம்பை தரும் என்றும் நம்பப்படுகிறது.. அந்த வகையில், தமிழகத்துக்கும் வரப்போகிறார் பிரியங்கா.. ராகுல் வந்து போனதற்கே, தமிழக காங்கிரஸில் ஒரு புத்துணர்ச்சி தென்படுகிறது என்றால், பிரியங்காவின் வருகையால் பல தமிழர்களின் மனம் ஈர்க்கப்படும் என்றும் நம்பப்படுகிறது..!

  English summary
  Priyanka Gandhi offers worship at attukal temple in Kerala
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X