திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியார் மட்டும் ஓர் இந்து தலைவராக இருந்திருந்தால்..? சபரிமலை புகழ் ராகுல் ஈஸ்வர் சொல்வதை பாருங்க!

சபரிமலை போராட்டக்காரரும் வலதுசாரி செயற்பாட்டாளருமான ராகுல் ஈஸ்வர் பெரியார் குறித்து எழுதிய டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை போராட்டக்காரரும் வலதுசாரி செயற்பாட்டாளருமான ராகுல் ஈஸ்வர் பெரியார் குறித்து எழுதிய டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த ராகுல் ஈஸ்வர் சபரிமலை போராட்டத்திற்கு பின் பெரிய வைரலானார். இந்து அமைப்புகளுடன் நெருக்கமாக இருக்கும் அவர் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய கூடாது என்று போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று பெரியார் நாளை முன்னிட்டு ராகுல் ஈஸ்வர் டிவிட் ஒன்று செய்திருந்தார். இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

என்ன கூறினார்

இந்த நிலையில் ராகுல் ஈஸ்வர் தனது டிவிட்டில் ''ஸ்ரீ பெரியார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். காந்திய அமைப்புகளில் ஈடுபட்டு நிறைய தியாகங்கள் செய்துள்ளார். பெரியாரும் அவரது குடும்பமும் மதுவிற்கு எதிராக போராடி உள்ளனர். நாம் (பிராமணர்கள்) ஒருவேளை அப்போது எல்லோருடனும் இயல்பாக நெருக்கமாக பழகி இருந்தால், நமக்கு பெரிய இந்து தலைவர் தமிழ் நாட்டில் இருந்து கிடைத்து இருப்பார்'' என்று கூறியுள்ளார்.

பெரிய விமர்சனம்

பெரிய விமர்சனம்

இந்த நிலையில் தற்போது ராகுல் ஈஸ்வரின் இந்த கருத்திற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் ஈஸ்வர் சபரிமலை பிரச்னையை தவிர மற்ற நேரங்களில் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு இருக்கிறார் என்று வலதுசாரி அமைப்பை சேர்ந்த பலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கட்சி

இவர் ''உங்களுக்கு அரசியலுக்கு வர விருப்பம் இருக்கிறது என்று தெரியும், அதற்காக இப்படியா'' என்று கேட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படி

ஏற்கனவே இப்படி

ராகுல் ஈஸ்வர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை கிடையாது. ஏற்கனவே இது போல சில முறை கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். புகழுக்காக இப்படி செய்கிறார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Sabarimala Fame Rahul Easwar's remark on Periyar on his anniversary becomes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X