திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா விரைந்த ராகுல் காந்தி.. வயநாட்டில் கேம்ப் அடிக்க முடிவு.. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்!

கேரளாவில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

4 நாட்களில் கேரளாவில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக அங்கு வயத்தில் 20க்கும் அதிகமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடுதான் அங்கு மழை காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வயநாடு என்ன

வயநாடு என்ன

இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதி எம்பியான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். அங்கிருந்து அவர் மலப்புரம் சென்றார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அவருடன் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உடன் இருந்தார். அதேபோல் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இவர்கள் முதற்கட்டமாக மலப்புரம் பகுதியில் சேதங்களை பார்வையிட்டனர்.

சேதங்களை பார்வை

சேதங்களை பார்வை

இதையடுத்து ராகுல் காந்தி இன்று மாலையும், நாளையும் வயநாட்டில் சேதங்களை பார்வையிட இருக்கிறார். அதன்பின் அவர் வயநாட்டில் உள்ள மற்ற சட்டமன்ற தொகுதிகளையும் பார்வையிட உள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சந்திப்பு

மக்கள் சந்திப்பு

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். வயநாடு தொகுதியில் அடுத்த சில நாட்களுக்கு இவர் தங்கி இருப்பார். மக்களை அங்கு நேருக்கு நேர் இவர் சந்தித்து நிவாரண பணிகளை செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rahul Gandhi in Kerala: He will meet people in flood-affected Wayanad Constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X