திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேட்டி, சட்டையில் செம கெட்டப்.. வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டில் போட்டியிட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, வேட்பு மனு தாக்கல் செய்தார். அமேதி தவிர்த்து 2வது தொகுதியாக வயநாட்டை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பியாக உள்ளார் ராகுல் காந்தி. கடந்த முறை இவரிடம் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி இம்முறையும் பாஜக சார்பில் அமேதியில் களம் காண்கிறார். இந்த நிலையில், கேரளாவின் வயநாட்டிலும் 2வது தொகுதியாக ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    "தென் இந்தியாவை பாஜக புறக்கணித்துவிட்டால் அங்குள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உங்களோடு நான் இருக்கிறேன் என்பதை காண்பிக்க வயநாட்டில் நான் போட்டியிட உள்ளேன்" என்று தனது பேட்டியில் விளக்கம் கொடுத்தார் ராகுல் காந்தி.

    வேட்புமனு தாக்கல்

    வேட்புமனு தாக்கல்

    இந்த நிலையில், இன்று வயநாட்டில் இன்று காலை 11.30 மணியளவில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இதையொட்டி, கோழிக்கோடுக்கு விமானத்தில் நேற்று இரவு வருகை தந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக இன்று வயநாடு வருகை தந்தார்.

    பிரியங்கா காந்தி

    பிரியங்கா காந்தி

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவருடன், சகோதரி பிரியங்கா காந்தி, கேரளா காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

    உ.பி., மேற்கு வங்கம், ஒடிசாவில் எந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி.. இந்தியா டிவி பரபர கருத்துக் கணிப்புஉ.பி., மேற்கு வங்கம், ஒடிசாவில் எந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி.. இந்தியா டிவி பரபர கருத்துக் கணிப்பு

    வேட்டி சட்டை

    ராகுல் காந்தி, வேட்டி, சட்டையுடன் தென் இந்தியர் போன்ற லுக்குடன் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும், தென் இந்திய கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் இந்த புதிய கெட்அப் முக்கியத்துவம் பெருகிறது. ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் கேரள காங்கிரசில் உற்சாகம் காணப்படுகிறது.

    நுழைவு வாயில்

    நுழைவு வாயில்

    வயநாடு தொகுதி, தமிழகத்தின் நீலகிரி மற்றும் கர்நாடக எல்லையோரத்தில் அமைந்துள்ளது. மும்மாநிலங்களின் நுழைவு வாயில் வயநாடு. இங்கு, தலா, 45 சதவீதம் அளவுக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உள்ளனர். பிறர் கிறிஸ்தவர்களாகும்.

    English summary
    Congress president Rahul Gandhi, who is contesting from Wayanad Lok Sabha seat in Kerala in addition to his traditional stronghold of Amethi in Uttar Pradesh, will file his nomination around 11.30 am on Thursday, senior party leader Ramesh Chennithala said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X