திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த ராகுல் காந்தியை அத்தொகுதி மக்கள் திக்குமுக்காட வைத்தனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி பொதுவாக அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் தென் இந்தியாவில் ராகுல் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்பினர்.

இதையேற்று ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டார். பின்னர் அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாட்டில் மட்டும் வெற்றி பெற்றார்.

ஆசைபட்டப்படி மீண்டும் பிரதமராகிட்டீங்க.. விஷயத்துக்கு வாங்க.. மோடிக்கு இம்ரான் கான் கடிதம்ஆசைபட்டப்படி மீண்டும் பிரதமராகிட்டீங்க.. விஷயத்துக்கு வாங்க.. மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் வெற்றி

வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அத்துடன் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.

3 நாள் பயணம்

3 நாள் பயணம்

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். இங்கு 3 நாட்களுக்கு, அதாவது நாளை வரை அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.

முழு ஆதரவு

முழு ஆதரவு

அதுமட்டுமல்லாமல் 6 சாலை பயணங்களில் பங்கேற்கிறார். இதில் ஒரு சாலை பயணத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மக்கள் முன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் நீங்கள் எனக்கு முழு ஆதரவை அளித்துள்ளீர்கள்.

அணுகலாம்

அணுகலாம்

எம்பியாக கேரள பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது எனது கடமையாகும். வயநாட்டில் உள்ள வாக்காளர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்றார்.

கேரளம்

கேரளம்

ராகுலின் சாலை பிரச்சாரத்தின்போது நீங்கள் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி அவரை திக்குமுக்காட வைத்தனர். ராகுல் 3 நாள் பயணமாக வயநாடு வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியும் கேரளத்துக்கு வந்துள்ளார்.

துலாபாரம்

துலாபாரம்

குருவாயூரில் துலாபாரத்தில் மோடி பங்கேற்றார். எடைக்கு எடை தாமரைப்பூவை செலுத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் தென்மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rahul Gandhi vists Wayanad for 3 days to thank voters. He also promised in road show that he will raise Kerala issues in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X