திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்ய சபா உறுப்பினர்.. பத்திரிக்கையாளர்.. மாரடைப்பு காரணமாக காலமானார் கேரள எம்பி வீரேந்திர குமார்!

கேரளாவை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி வீரேந்திர குமார் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 12.30 மணிக்கு அவரின் வீட்டில் காலமானார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி வீரேந்திர குமார் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 12.30 மணிக்கு அவரின் வீட்டில் காலமானார்.

கேரளாவை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி வீரேந்திர குமார், அம்மாநிலதை சேர்ந்த முக்கியமான அரசியல் தலைவர் மற்றும் பத்திரிக்கையாளர். கேரளாவின் பிரபல தினசரி நாளிதழான மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குனராக இவர் இருக்கிறார். அதேபோல் பிடிஐ (press trust of india) நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் இவர் இருக்கிறார்.

Rajya Sabha MP Veerendra Kumar, died at a private hospital following cardiac arrest in Kerala

இவருக்கு தற்போது 84 வயதாகிறது. கேரளாவை சேர்ந்த முக்கியமான சோஷலிஸ்ட் தலைவர்களில் இவரும் ஒருவர். கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வந்த இவர் தேசிய மற்றும் கேரளா மாநில அரசியல் இரண்டிலும் முக்கியமான நபர். இரண்டு முறை இவர் கோழிக்கோடு தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிபிஐ ஆகிய கட்சிகளில் இவர் இருந்துள்ளார்.

மத்திய மாநில அமைச்சராக இருந்துள்ளார். 2010ல் இவர் சாகித்ய அகாடமி விருதும் வாங்கியுள்ளார். 1987ல் இவர் கல்பேட்டா தொகுதியில் எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர், கேரளாவில் வனத்துறை அமைச்சர், நகர மேம்பட்டு மற்றும் அபிவிருத்தி துறை அமைச்சர் என்று பல அமைச்சரவை பொறுப்புகளை வகித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 50% இடஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக அதிரடி வழக்கு!முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 50% இடஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக அதிரடி வழக்கு!

1979ல் இருந்து கேரளாவின் பிரபல தினசரி நாளிதழான மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குனராக இவர் இருக்கிறார். கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக இவர் இடதுசாரி கூட்டணி மூலம் தேர்வு செய்யப்பட்டார். இவரின் இறப்பு காரணமாக அந்த இடம் தற்போது காலியாகிறது.

இவருக்கு கடந்த சில வாரங்களாக உடலில் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு 11 மணிக்கு நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று அதிகாலை 12.30 மணிக்கு அவர் காலமானார்.

English summary
Rajya Sabha MP Veerendra Kumar, died at a private hospital following cardiac arrest in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X