திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha results 2019 | மக்களவை தேர்தலில் வென்ற 78 பெண் எம்.பி-க்கள்

    திருவனந்தபுரம்: ரம்யா ஹரிதாஸ் படு அடக்கமாக இருக்கிறார். தான் செய்த சாதனை அவரது தலையில் ஏறவில்லை. மாறாக, பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகவே உணர்கிறார். ரம்யா ஹரிதாஸ்.. கேரளாவின் சாதனைப் பெண்.

    ரம்யா செய்த சாதனை சாதாரணாமதல்ல. இடதுசாரி கோட்டையைத் தகர்த்துள்ளார். அதுவும் எப்படி..மாபெரும் வாக்கு வித்தியாசத்தில். இவர் பெரும் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவரல்ல. சாதாரண தலித் பெண்.

    ஆலத்தூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட ரம்யா ஹரிதாஸ், இடதுசாரி வேட்பாளர் பி.கே.பிஜுவை ஒன்றலை லட்சகத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வீழ்த்தியுள்ளார். இந்தத் தொகுதி இடதுசாரிகளின் கோட்டையாகும்.

    தெலுங்கானாவில் காவி கொடி விரைவில் பறக்கும்... காங். டி.ஆர்.எஸ். வாக்கு வங்கிகள் கபளீகரம்! தெலுங்கானாவில் காவி கொடி விரைவில் பறக்கும்... காங். டி.ஆர்.எஸ். வாக்கு வங்கிகள் கபளீகரம்!

    போராளி

    போராளி

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராதாவின் மகள்தான் ஹம்யா ரஹரிதாஸ். கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். ஏழை எளியவர்கள், ஆதிவாசிகள், பெண்களுக்காக போராடி வருபவர். ராகுல் காந்தியின் கண்ணில் பட்ட இளம் போராளிகளில் இவரும் ஒருவர்.

    களம் குதித்தார்

    களம் குதித்தார்

    தமிழகத்தில் ஜோதிமணி போல, கேரளாவில் இளம் காங்கிரஸ் தலைவராக வார்த்தெடுக்கப்பட்டவர் ரம்யா. ரம்யாவை இந்த லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளின் கோட்டையான ஆலத்தூரில் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. அப்போது ரம்யா பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு களம் குதித்தார்.

    புயல் பிரச்சாரம்

    புயல் பிரச்சாரம்

    ரம்யாவுக்காக காங்கிரஸ் கட்சியின் அத்தனை பிரிவினரும் புயலென மாறிப் பிரச்சாரம் செய்தனர். அதை விட ஆச்சரியம், ஆலத்தூர் மக்களிடையே ரம்யாவுக்கு ஏகோபித்த ஆதரவு கிளம்பியதே. கிட்டத்தட்ட ஊர் கூடி ரம்யாவுக்காக பிரச்சாரம் செய்தது. இது இடதுசாரியினரை அதிர வைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

    எளிமையான பிரச்சாரம்

    எளிமையான பிரச்சாரம்

    குடும்பம் குடும்பமாக போய் மக்களை சந்தித்தார் ரம்யா. அவர்கள் வீட்டுப் பிள்ளை போல மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது அணுகுமுறை, எளிமை மக்களை வெகுவாக கவர்ந்தது. எங்க வீட்டுப் பொண்ணு என்ற பெயரை படு வேகமாக சம்பாதித்தார் ரம்யா. இதெல்லாம் வெற்றிச் செய்தி வந்ததும் பாச மழையாக வெளிப்பட்டது.

    பாட்டுப் பாடி ஓட்டு வேட்டை

    பாட்டுப் பாடி ஓட்டு வேட்டை

    ரம்யாவின் பிரச்சாரத்தில் படு வித்தியாசமாக பார்க்கப்பட்டு என்ன தெரியுமா.. அவர் பாட்டுப் பாடியதுதான். போகும் இடமெல்லாம் அவரை பாட்டுப் பாடச் சொல்லி மக்கள் அன்புத் தொல்லை கொடுத்தனர். ரம்யாவும் சளைக்காமல், வெட்கப் புன்னகை சிந்தியடி பாட்டுப் பாடி கலக்கினார். இதெல்லாம் மக்களுக்கு ரம்யா மீது கொள்ளை அன்பு வர முக்கியக் காரணமாக அமைந்தது.

    எங்க தங்கச்சி ஜெயிச்சுட்டா

    எங்க தங்கச்சி ஜெயிச்சுட்டா

    எங்க தங்கச்சி என்று ஆண்கள் ரம்யாவைக் கொண்டாடி வருகின்றனர். தங்கச்சி ஜெயிச்சுட்டா என்று கூறி தோளில் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே ரம்யாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2வது தலித் பெண் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Young Congress woman Ramya Haridas has registered a big record in Kerala LS polls as she has won Alathur seat with a huge margin of votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X