திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளத்தில் கனமழை எதிரொலி.. ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கனமழையால் மக்கள் மகிழ்ச்சி... ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற சூழல்...

    திருவனந்தபுரம்: கேரளத்தில் கனமழை எதிரொலியால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. இதனால் கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதையடுத்து கேரளத்தின் பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பயங்கர காற்று வீசி வரும் நிலையில் மின்கம்பி சாய்ந்துவிட்டன. மரங்களும் வேரோடு சாய்ந்து விட்டன.

    சாலைகளில் தண்ணீர்

    சாலைகளில் தண்ணீர்

    இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி, மலன்காரா, பாம்ப்லா ஆகிய அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அது போல் கோழிக்கோடு மாவட்டத்தில் சாலியார், சலிபுழா ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் வழிந்து சாலை மற்றும் பாலங்களில் ஓடுகிறது.

    விடுமுறை

    விடுமுறை

    இந்த நிலையில் இன்றைய தினம் மலப்புரம், இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    தேர்வுகள் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வீட்டுக்குள் முடக்கம்

    வீட்டுக்குள் முடக்கம்

    அது போல் திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணனூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர்.

    English summary
    IMD issues Red alert warning for Idukki, Malappuram and Kozhikode today as it gets heavy rainfall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X