திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜஸ்ட் மிஸ்".. அனிதாவை அலேக்காக தூக்கி கொண்டு ஓடிய ஓமணக்குட்டன்.. உயிரை காப்பாற்றி.. சபாஷ்!

ஓடும் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை போலீஸ்காரர் காப்பாற்றினார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஓடும் ரெயிலில் திடீரென அனிதா என்ற பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.. அப்போதுதான் ஓமணக்குட்டன் என்ற போலீஸ்காரர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அனிதாவின் உயிரை காப்பாற்றினார்.. அந்த காட்சிகள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த சக பயணிகள், ஏதோ உடலில் பிரச்சனை என்பதை கவனித்துவிட்டு உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள்..

RPF officers timely intervention saves woman in Kerala, viral video

அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு இதை தெரியப்படுத்தினார்கள்.. உடனடியாக ரெயில்வே போலீஸ் அதிகாரிகள், அனிதாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டனர்.
அந்த ரெயில் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததுமே, ஓமணக்குட்டன் அனிதா இருந்த கம்பார்ட்மென்ட்டுக்கு ஓடினார்.. ஓமணக்குட்டன் ஒரு ரயில்வே போலீஸ்காரர்.. நோயாளியை அழைத்து செல்ல வீல் சேர், ஸ்டெச்சர் இப்படி எதற்காகவுமே அவர் காத்திருக்கவில்லை.. அனிதாவை இரு கைகளாலும் தூக்கி கொண்டு, மின்னல் வேகத்தில் ஓடினார்.

அங்கே தயாராக இருந்த டாக்டர்கள் திருச்சூர், அனிதாவுக்கு முதலுதவி சிகிச்சை தந்தனர்.. அதன்பிறகு, திருச்சூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அங்கு அனிதாவை பரிசோதித்த டாக்டர்கள், ரயிலிலேயே ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாகவும், சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால்தான் உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

 அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி! - கையேந்தும் நிலையில் சீனா அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி! - கையேந்தும் நிலையில் சீனா

இப்போதும் அனிதா ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார்.. ஆனால் ஓமணக்குட்டனுக்குதான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள், பயணிகள், அனிதாவின் குடும்பத்தினர், பொதுமக்கள் என எல்லாருமே பாராட்டினர்.. அனிதாவை போலீஸ்காரர் ஓமணகுட்டன் 2 கைகளில் ஏந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English summary
RPF officers timely intervention saves woman in Kerala, viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X