திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலைக்கு போகும் சாமிகளே... சந்தோஷ செய்தி - நவ.23 முதல் மீண்டும் ஆன்லைன் புக்கிங்

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் ஆன்லைன் புக்கிங் தொடங்க உள்ளது தினசரி 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத

Google Oneindia Tamil News

சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க முடியாதா? சபரிமலைக்கு போக முடியாதா என்று ஏங்கித் தவித்த சாமிகளுக்கு ஒரு சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளது தேவசம்போர்டு நிர்வாகம். ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. தினசரி 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டல காலம் கடுமையாக விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதுவார்கள்.

 Sabarimala ayyappan Temple Darshan Online Booking from November 23rd 2020

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு ஐப்பசி மாதத்தில் துலா மாத பூஜைக்காக குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது.

இந்த ஆண்டு மண்டல பூஜை காலம் 16ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தினசரி ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வீதமும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் வீதமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். சீசன் காலங்களில் கூடுதலான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

"நாசமாக்கிட்டான்".. யார் அந்த நடிகை.. லேப்டாப்பில் சிக்கிய தடயங்கள்.. மாட்டிக் கொண்ட காசியின் அப்பா

பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளதால் சபரிமலைக்கு வருமானமும் குறைவாகவே வருகிறது. கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கடைகளை ஏலம் எடுக்கவும் வியாபாரிகள் வரவில்லை வெறும் 4 கோடி ரூபாய்க்கு மட்டு கடைகள் ஏலம் போயுள்ளன. இந்த நிலையில் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 Sabarimala ayyappan Temple Darshan Online Booking from November 23rd 2020

இந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செய்ய கட்டாயமாக இணையவழியில் பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு டிக்கெட் புக் செய்ய வேண்டியது அவசியம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது எப்படி?

சபரிமலை தரிசனம் செய்ய முதலில் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தில் Register என்பதை கிளிக் செய்து தேவையான தகவல்களை உள்ளிடவும்.
இதில் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, புகைப்படத்துடன் கூட அடையாள அட்டை, முகவரி, மாநிலம், மாவட்டம், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.

தகவல்களை சமர்ப்பித்ததும் அதில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு 'OTP' அனுப்பப்படும். மீண்டும் இ-மெயில், பாஸ்வேர்ட் உள்ளிட்டு உள்நுழைந்து தரிசனம் செய்வதற்கான தேதி தேர்வு செய்து கொள்ளவும் மேலும் பிரசாதத்தில் அரவன, அப்பம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் எத்தனை தேவை போன்ற விபரங்களை உள்ளிட்டு ஆன்லைன் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.

English summary
The Devaswom Board administration has issued a good news to the Samis who are longing to go to Sabarimala. Online booking to visit Ayappan starts again from November 23rd. 2 thousand devotees are to be admitted daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X