திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஐயப்பனை" பார்க்க போறீங்களா.. அப்போ இதுதான் கண்டிஷன்.. கேரளாவில் வந்தது புது கட்டுப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பக்தர்களுக்கு மட்டுமல்ல, சபரிமலை கோவிலில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது விதிக்கப்பட்டு விட்டன.. இது எல்லாத்துக்கும் காரணம் கொரோனாதான்!

சபரிமலையில் இது சீசன்.. அதனால் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.. ஆனால், இப்போது தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால், முன்புபோல் அனைவருக்கும் அனுமதி இல்லை.

Sabarimala Ayyappan temple restrictions increased due to Covid19

லட்சக்கணக்கில் பக்தர்கள் என்றில்லாமல், சில ஆயிரம் பேர் மட்டுமே இப்போது அனுமதிக்கப்படுகிறார்கள்.. அதுவும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்... 24 மணிநேரத்துக்கு முன் பெற்ற கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட்டை பக்தர்கள் கையிலேயே கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் விதிமுறை.

இந்நிலையில், பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், கோவிலில் பணியாற்றுபவர்களுக்கும் இப்போது கூடுதல் கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை விதித்துள்ளது.. இதற்கு காரணம், சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதியானது.. அதனாலேயே மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு பெண்கள் நுழைவதைத் தடுக்கும் வழிகாட்டுதலை கேரள அரசு திரும்பப்பெற்றது சபரிமலைக்கு பெண்கள் நுழைவதைத் தடுக்கும் வழிகாட்டுதலை கேரள அரசு திரும்பப்பெற்றது

அதன்படி, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறையினர், அர்ச்சகர்கள், ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் செய்து, அதற்கான சர்ட்டிபிகேட்டை வைத்திருக்க வேண்டும்... கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன... கேரளாவை சேர்ந்த எல்லாருக்கும் கொரோனா டெஸ்ட் இலவசமாகவும், மற்ற மாநில தொழிலாளர்களுக்கு ரூ.625 கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sabarimala Ayyappan temple restrictions increased due to Covid19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X