திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு!

சபரிமலை கோவிலுக்குள் இன்று பெண்களுடன் சென்று வழிபடுவேன் என்று மும்பையை சேர்ந்த புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் இன்று பெண்களுடன் சென்று வழிபடுவேன் என்று மும்பையை சேர்ந்த புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் மீது மீண்டும் விசாரணை நடக்க உள்ளது.

ஆனால் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் அங்கு கோவிலுக்குள் பெண்கள் செல்ல முயன்று வருகிறார்கள்.

இரவோடு இரவாக நடந்த சோதனை.. சரியாக இலக்கை தாக்கிய அக்னி 2.. ஒடிசாவில் என்ன நடந்தது?இரவோடு இரவாக நடந்த சோதனை.. சரியாக இலக்கை தாக்கிய அக்னி 2.. ஒடிசாவில் என்ன நடந்தது?

நடை திறப்பு

நடை திறப்பு

இந்த நிலையில் சபரிமலை கோவிலில் நடைபாதை நேற்று திறக்கப்பட்டது. மகரவிளக்கு மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து சபரிமலை கோவிலுக்கு மாலை அணிவித்து இருந்த ஆண்கள் பலர் கோவிலுக்கு சென்றனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

இதையடுத்து நேற்று ஆன்லைன் மூலம் சபரிமலை கோவிலுக்கு செல்ல 10 பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஆந்திராவில் சபரிமலைக்கு வந்த 10 நடுத்தர வயது பெண்கள், பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

வழிபாடு

வழிபாடு

இந்த நிலையில் இன்று சபரிமலை கோவிலில் வழிபாடு நடத்த போவதாக புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். இவர் சபரிமலைக்கு செல்ல தன்னுடன் 5 பெண்களை அழைத்து கொண்டு கடந்த வருடம் சென்றார். ஆனால் போராட்டம் காரணமாக இவர் கொச்சி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து இந்த வருடம் மீண்டும் அவர் கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இன்று அவர் கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார். இதனால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏ.டி.ஜி.பி. தலைமையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

English summary
Sabarimala Case: Trupti Desai to Attempt Darshan Today amidst heavy security in the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X