திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலையில் நாளை மகரவிளக்கு.. உச்சக்கட்ட டென்ஷன்.. பதைபதைப்பில் போலீசார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோயலில் நாளை மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரபரப்பான... பதற்றமான சூழ்நிலைகளுக்கு இடையே, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், கூட்டம் கூட்டமாக இருமுடி சுமந்து வந்து, ஐயனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Sabarimala makaravilakku festival to be held tomorrow, police ac

நாள்தோறும் நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு மற்றும் மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள், பந்தளத்திலிருந்து சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டன. இந்த ஆபரணங்கள் நாளை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனேவே, சபரிமலை விவகாரம் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Preparations are going in full swing for the Makaravilakku festival to be held on Monday st Sabarimala. Purification rituals were held at the temple as part of the festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X