திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து.. சபரிமலை போராட்டத்தில் பரபரப்பு!

சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை போராட்டத்தில் பரபரப்பு | பினராயி விஜயனிடம் ஆளுநர் சதாசிவம் கோரிக்கை- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து நேற்று போராடினார்கள்.

    இந்த போராட்டத்தில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் இது தொடர்பாக 750க்கும் அதிகமானோரை இதுவரை கைது செய்து இருக்கிறார்கள்.

    கடை பிரச்சனை

    கடை பிரச்சனை

    இந்த நிலையில் இந்து அமைப்புகளை சேர்ந்த போராட்டக்காரர்கள் நேற்று பல இடங்களில் இயங்கி வந்த கடைகளை மூடும்படி சண்டையிட்டு இருக்கிறார்கள். கேரளாவில் நடந்த இந்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பல கடைகள் நேற்று வழக்கம் போல இயங்கி வந்தது.

    பரோட்டா கடை மூட வேண்டும்

    பரோட்டா கடை மூட வேண்டும்

    கேரளாவில் திருச்சுரில் இதேபோல் பரோட்டோ கடை ஒன்று நேற்று இயங்கி வந்திருக்கிறது. அது, வதனப்பள்ளி என்ற இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நபரின் கடை ஆகும். இந்த கடையை மூட சொல்லி போராட்டக்காரர்கள் சண்டையிட்டு இருக்கிறார்கள்.இந்த சண்டை பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது.

     கத்தி குத்து

    கத்தி குத்து

    இந்த கலவரத்தில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டனர். ஸ்ரீஜித், சுஜித், ரத்தீஷ் ஆகிய மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இந்த கத்தி குத்து தொடர்பாக 3 பேர் இது வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    Sabarimala Protest: 3 BJP cadres stabbed in Kerala when the protest turned violent. Police arrested few.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X