திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு சபரிமலை செல்ல என்னென்ன விதிமுறைகள்.. யாருக்கு அனுமதி.. யாருக்கு தடை.. விவரம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்த ஆண்டு சபரிமலை சீசனில் ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆன்லைன் வரிசை சிஸ்டத்தில்மட்டுமே கோயில் சுவாமியை தரிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்ல கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆகும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் -மகரவிலக்கு பூஜைக்காக நவம்பர் 16 ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. கார்த்திகை, மார்கழி மற்றும் தை முதல் வாரம் நடைபெறும் இரண்டு மாத கால விழாவில் ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறைந்த அளவு பக்தர்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி சபரிமலை ஐயப்பன் கோயில் விழாவை நடத்த கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில உயர் மட்ட குழு கூட்டம் நடந்தது.

ஓபிஎஸ்-க்கு கொடுத்தாங்க பாரு பில்டப்பு... அடேங்கப்பா வைரலாகும் (பேச்சி) முத்து ஆவணப்படம்!ஓபிஎஸ்-க்கு கொடுத்தாங்க பாரு பில்டப்பு... அடேங்கப்பா வைரலாகும் (பேச்சி) முத்து ஆவணப்படம்!

குறைவான பக்தர்கள் அனுமதி

குறைவான பக்தர்கள் அனுமதி

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, 0 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சபரிமலைக்குள் னுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பாக பக்தர்கள் வந்து செல்வதை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, ஆன்லைல் வரிசையில் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

சான்றிதழ் அவசியம்

சான்றிதழ் அவசியம்

சபரிமலைக்கு வரும் , பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் சபரிமலை கோயிலுக்கு அருகில் வந்த உடன் , பக்தர்கள் மீண்டும் சன்னிதானத்திற்குள் நுழையும் முன் கேரள மாநில அதிகாரிகளால் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்

குளிக்க அனுமதி இல்லை

குளிக்க அனுமதி இல்லை

இந்த ஆண்டு சபரிமலை கோயிலில் சுவாமியை இரவில் தங்கியிருந்து தரிசிக்க அனுமதி கிடையாது. பம்பை நதியில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் குளிக்க எரிமெலி மற்றும் பம்பையில் தண்ணீர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.

முதல்வர் விளக்கம்

முதல்வர் விளக்கம்

கொரோனா நெறிமுறையை பின்பற்றி நெய் அபிஷேகம், பிரசாதங்கள் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, தரிசனத்திற்காக மலைகளில் ஏறும் பக்தர்களுக்கு குடிநீர். நீர் தொட்டிகளில் வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசின் விற்பனை நிலையங்கள் பம்மையில் திறக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பினராயி பதில்

பினராயி பதில்

மாநில செயலாளர், உள்துறை செயலாளர், முதன்மை செயலாளர் தேவஸ்வம் வாரியம் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு சபரிமலையில் நிலைமையை ஆராய்ந்து முடிவெடுக்கும். மலையில் ஏறும் போது முககவசம் அணிவது குறித்து சிலர் எழுப்பியுள்ள கவலைகளையும் மாநில சுகாதார அமைச்சகம் ஆராயும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

English summary
What are the rules to go to Sabarimala this year? : those below 10 years and above 60 will not be allowed to take part in the pilgrimage. The government also said as part of ensuring a safe pilgrimage season amid the Covid-19 pandemic, only a limited number of pilgrims who register through the virtual queue system will be allowed entry at the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X