• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அன்று சோலார் சரிதா இன்று தங்கம் ஸ்வப்னா - கேரளா அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள்

|

திருவனந்தபுரம்: கேரளா அரசியலில் அடிக்கடி பெண்களால் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. அது கேரளாவிற்கு பிடித்த சாபக்கேடோ என்னவோ தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சியோ எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் அந்த ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க யாராவது ஒரு பெண் முளைத்து விடுகிறார். உம்மன் சாண்டி ஆட்சி காலத்தில் சரிதா நாயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இப்போது பினராயி விஜயன் கண்ணில் துரும்பாக விழுந்திருக்கிறார் ஸ்வப்னா சுரேஸ். அன்று சரிதா நாயர் என்ன செய்தார் இன்று ஸ்வப்னாவினால் என்ன பிரச்சினை என்பதை கொஞ்சம் டீடெய்லாகவே பார்க்கலாம்.

  Gold Smuggling | Kerala அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் |Swapna Suresh |Saritha Nair

  கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னாவின் தங்கம் கடத்தல் விவகாரம், அம்மாநில அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து வருகிறது. அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்ட ஸ்வப்னா, ரூ.100 கோடி அளவுக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

  கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்வப்னா வேலை செய்த இடத்தில் எல்லாமே சர்ச்சைதான். முதலில் அபுதாபி விமான நிலையத்தில் வேலை செய்த அவர், கணவரிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு கேரளாவிற்கு வந்தார். வந்த இடத்தில் ஏர் இந்தியாவில் வேலை செய்தார். அதிகாரி மீது பொய் புகார் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேதான் தங்கம் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியிருக்கிறார். அங்கேயும் சர்ச்சையில் சிக்கியதால் விரட்டப்பட்டிருக்கிறார் ஸ்வப்னா.

  கொரோனாவின் கோர முகம்.. புதிய ஹாட்ஸ்பாட்டுகளாகும் கர்நாடகா, தெலுங்கனா கொரோனாவின் கோர முகம்.. புதிய ஹாட்ஸ்பாட்டுகளாகும் கர்நாடகா, தெலுங்கனா

  பங்களா கட்டிய ஸ்வப்னா

  பங்களா கட்டிய ஸ்வப்னா

  மாநில அரசின் உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள் சிலரது அறிமுகம் கிடைக்கவே, அவரது ஆட்டம் அதிகரித்து விட்டது. ஸ்டார் ஹோட்டல்களில் பார்ட்டி கொடுத்தே பலரையும் வசப்படுத்திக்கொண்ட ஸ்வப்னா, தங்கத்தை சகட்டு மேனிக்கு கடத்தியுள்ளார். இதுவரைக்கும் ஸ்வப்னா, ரூ.100 கோடி அளவுக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. மிகப்பெரிய பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறாராம். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்போது வசமாகக் சிக்கிக்கொண்டார்.

  சிக்கலில் பினராயி விஜயன் செயலாளர்

  சிக்கலில் பினராயி விஜயன் செயலாளர்

  கேரளஅரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் உயர் பதவிக்கு ஸ்வப்னா சுரேஷ் நியமிக்கப்பட்டது எப்படி என காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கர், அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  விரிவான விசாரணைக்கு உத்தரவு

  விரிவான விசாரணைக்கு உத்தரவு

  ஸ்வப்னா சுரேசுக்கு அரசு உயர் பதவி வழங்கப்பட்ட விவகாரம் என் கவனத்திற்கு வரவில்லை. மேலும் இப்பிரச்சினையில் முதல்வர் அலுவலகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து பினராயி விஜயன், ஸ்வப்னா நியமனம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கேரளா அரசியலில் அடிக்கடி பெண்களால் சர்ச்சை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

  உம்மன் சாண்டி அரசை ஆட்டிய சரிதா நாயர்

  உம்மன் சாண்டி அரசை ஆட்டிய சரிதா நாயர்

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் பேனல் வழக்கு புயலை கிளப்பியது. கேரளாவில் கடந்த உம்மன் சாண்டி ஆட்சி காலத்தில்
  சரிதா நாயர் என்ற பெயர் கேரளா எங்கும் எதிரொலித்தது. பத்தாம் வகுப்பில் 600க்கு 535 மார்க் வாங்கிய புத்திசாலி பெண் சரிதாவிற்கு 18 வயதில் திருமணம் முடிந்தும் அந்த மண வாழ்க்கை நீடிக்கவில்லை. சாமர்தியமான பேச்சால் பங்குச்சந்தை,கிரெடிட் கார்டு பிசினசில் வெற்றி பெற்ற சரிதாவிற்கு கை கொடுத்த சோலார் பேனல்தான்.

  கோடிகளை குவித்த சரிதா

  கோடிகளை குவித்த சரிதா

  பிஜூ ராதாகிருஷ்ணன் அறிமுகம் கிடைக்க சோலார் பேனல் நிறுவனத்தை தொடங்கி கோடிகளில் புரண்டனர். பொதுமக்களிடம் நிதி திரட்டி கோடிகளில் குளித்தனர். சரிதாவை ஏமாற்றி விட்டு பணத்தை ஏப்பம் விட்டார் பிஜூ மேனன். 2013ல் இருவருமே கைதானார்கள்.
  விஜிலன்ஸ் விசாரணையில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.9 கோடி பணம் கொடுத்தேன் என்று அதற்கு ஆதாரமாக சிடிக்களை கொடுத்து வசமாக சிக்க வைத்தார் சரிதா.

  பிரச்சினையில் உம்மன் சாண்டி

  பிரச்சினையில் உம்மன் சாண்டி

  உம்மன் சாண்டியின் கண்ணில் இன்னமும் தூசியாக உறுத்திக்கொண்டிருக்கிறார் சரிதா நாயர். சரிதாவின் புகார்களை உம்மன் சாண்டி மறுத்தாலும், உண்மை கண்டறியும் சோதனைக்கு உடன்படாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது 2016ஆம் ஆண்டு உம்மன் சாண்டி அரசு மண்ணைக் கவ்வ அதுவே காரணமாக அமைந்தது.

  சரிதாவும் ஸ்வப்னாவும்

  சரிதாவும் ஸ்வப்னாவும்

  அது மட்டுமல்லாமல் உம்மன் சாண்டி மீது ஊழல் புகார் சொன்னால் பத்து கோடி வரை பணம் தருவதாக இடது கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் சொன்னார் என்றும் ஒரு குண்டை போட்டார். இப்போது சினிமாக்களில் நடித்து பிரபலமாகிவிட்டார். எது எப்படியோ கேரளா அரசியலில் பெண்களால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும் அது ஆள்பவர்களுக்கு சங்கடத்தை தருவதும் தொடர்கதையாகி வருகிறது.

   
   
   
  English summary
  Kerala gold smuggling case has become sensational in Kerala, with the opposition trying to make an analogy to the Solar Scam controversy that rocked the previous Congress chief minister Oommen Chandy. The alleged links of Chandy's office to Saritha S. Nair, who was at the centre of a fraud and bribe controversy, is considered to have brought immense damage to the government, eventually leading to its fall in 2016.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X