திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி!

கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul Gandhi in Wayanad: ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட இப்படி ஒரு காரணம் இருக்கா?- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது.

    கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மோசடி குற்றச்சாட்டுதான் சோலார் பேனல் மோசடி. சோலார் பேனல்களை வாங்கி விற்பதில் முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் மக்களை பலர் ஏமாற்றி இருக்கிறார்கள்.

    பல கோடிகளை அப்போதைய காங்கிரஸ் அரசு சுருட்டி இருக்கிறது என்று 2013ல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளிகளாக சரிதா நாயரும் அவரின் காதலர் பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார்கள்.

    புகார் அளித்தார்

    புகார் அளித்தார்

    இந்த ஊழலில் முன்னாள் கேரளா காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு திருப்பமாக சரிதா நாயர், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் அளித்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    தேர்தலில் போட்டி

    தேர்தலில் போட்டி

    இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தற்போது சரிதா நாயர் போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் இவர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி தான் கொடுத்த புகார்களுக்கு செவிமடுக்கவில்லை. அதனால் அவருக்கு எதிராக போட்டியிட போகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

    வேட்டி, சட்டையில் செம கெட்டப்.. வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!வேட்டி, சட்டையில் செம கெட்டப்.. வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

    இன்னொரு இடம்

    இன்னொரு இடம்

    அதேபோல் இவர் எர்ணாகுளம் தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஹிபி ஈடன் போட்டியிடுகிறார். இவர் மீதுதான் சரிதா முதன்முதலாக பாலியல் தொல்லை புகார் அளித்தார். அதனால் அவருக்கு எதிராகவே இப்போது போட்டியிடுகிறார்.

    பேட்டி

    பேட்டி

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சரிதா, நான் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து ராகுல் காந்திக்கு பலமுறை கடிதங்கள் எழுதினேன். ஆனால் அவர் பதில் அளிக்கவே இல்லை. அதனால்தான் இப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு பாடம் புகட்ட தேர்தலில் நிற்கிறேன். எனக்கு நியாயம் கிடைத்தால் போதும், தேர்தலில் வெற்றி பெற ஆசை கிடையாது, என்று கூறியுள்ளார்.

    English summary
    Saritha Nair will contest in Lok Sabha election against Congres Chief Rahul Gandhi in Wayanad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X