திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலைக்கு நுழைய முயன்ற கேரள ஆசிரியர்.. குழந்தைக்கு இத்தகைய தண்டனை கொடுத்த வலதுசாரிகள்?

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலைக்கு நுழைய முயற்சி... மகளின் படிப்பிற்கு தொந்தரவு கொடுக்கும் வலதுசாரிகள்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் நுழைய முயன்ற கேரள ஆசிரியரின் மகளுக்கு பள்ளிகளில் சேர்க்கைகான அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கியது. இதற்கு வலது சாரி அமைப்புகள், இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதைத் தொடர்ந்து ஐப்பசி மாத நடைத் திறப்புக்கு ஏராளமான பெண்கள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை வலது சாரிகள் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். எனினும் தற்போது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை ஐயனை தரிசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    மறுப்பு

    மறுப்பு

    இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் சென்றிருந்தார். எனினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவரது மகளுக்கு பள்ளி சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

    பெண்கள் நுழைய

    பெண்கள் நுழைய

    பாலக்காடு மாவட்டம் அகாலியை சேர்ந்தவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக உள்ளவர் பிந்து தங்கம் கல்யாணி ஆவார். இவர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார்.

    பள்ளியில்

    பள்ளியில்

    ஒரு கட்டத்தில் சபரிமலைக்கு செல்ல முயன்றார். எனினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தன்னுடைய 11 வயது மகளின் பள்ளி சேர்க்கைக்காக அணைக்கட்டில் உள்ள வித்யா வனம் பள்ளியை அணுகினார். அவர்களும் பள்ளியில் சேர்த்து கொள்வதாக தெரிவித்தனர்.

    கல்யாணிக்கு தெரியவந்த உண்மை

    கல்யாணிக்கு தெரியவந்த உண்மை

    இதனால் நேற்றைய தினம் தனது மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி வளாகத்தில் 60 பேர் கூடியிருந்தனர். அது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் எனது மகளுக்கு பள்ளியில் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது கல்யாணிக்கு பின்னர்தான் தெரியவந்தது.

    பள்ளி சேர்க்கை

    பள்ளி சேர்க்கை

    சிறிய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வலது சாரி இயக்கங்கள் எப்படி போராட்டம் நடத்தின என்பது புரியாத புதிராக உள்ளது. அரசு பள்ளியில் படித்த அவரது மகளுக்கு அங்கு மனதளவில் டார்ச்சர் செய்ததால் அந்த பள்ளியிலிருந்து இந்த தனியார் பள்ளிக்கு சேர்க்கைக்கு சென்றுள்ளார் கல்யாணி.

    English summary
    A Kerala teacher alleges that her daughter has been denied admission at a private school because of right wing outfits.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X