திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 வருடத்தில்.. 59 பிஞ்சுகள்.. மிட்டாய் வாங்க வந்த சிறுமிகளை நாசம் செய்த பெட்டிக்கடைக்காரர்!

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார் பெட்டிக்கடைக்காரர் ஒருவர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 2 வருஷத்தில் 59 சிறுமிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார் ஒரு பெட்டிக்கடைக்காரர்.. அதுவும் மிட்டாய் வாங்க வரும் குழந்தைகளிடம்தான் இந்த வேலையை காட்டி உள்ளார்.

கேரளாவின், பாலக்காடு அருகே பட்டாம்பி திருத்தலா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். வயசு 57ஆகிறது. இவர் ஒரு சபல பேர்வழி. அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.

School Students sexually assaulted by 57 years old man

அதனால் பள்ளி மாணவ, மாணவிகள் இங்கு மிட்டாய் வாங்க வருவது வழக்கம். இந்த மாணவிகளை கிருஷ்ணன் கடைக்குள் ஏமாற்றி அழைத்து சென்று மிரட்டி பாலியல் சீண்டல், சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதிலும், 6, 7ம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளை அதிகமாக சீரழித்துள்ளாராம். இதை பாதிக்கப்பட்ட ஒரு மாணவியே வகுப்பு ஆசிரியையிடம் சொல்லி அழுதுள்ளார். அப்போதுதான் விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது. உடனே அந்த ஆசிரியை குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் செய்யவும், அதிகாரிகள் விரைந்து வந்துவிட்டனர்.

அதீத அழகு.. விட்டுப் போய்டுவாளோ.. மனசெல்லாம் சந்தேகம் பயம்.. வெட்டிக் கொன்ற காதலன்அதீத அழகு.. விட்டுப் போய்டுவாளோ.. மனசெல்லாம் சந்தேகம் பயம்.. வெட்டிக் கொன்ற காதலன்

இது சம்பந்தமாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 2 வருஷமாக 59 மாணவிகளிடம் இதுபோல சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொல்லை தந்துள்ளது தெரியவந்தது. பிறகு குழந்தைகள் நல அமைப்பினர் பட்டாம்பி திருத்தலா போலீசில் புகார் செய்யவும், போலீசார் உடனடியாக கிருஷ்ணன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் புகார் சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கும்போதே பெட்டிக்கடைக்கார கிருஷ்ணன் மிஸ்ஸிங்.. எப்படியும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதால் தலைமறைவாகி உள்ளார். எனினும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

English summary
In Kerala, 57 year old man sexually harassing 59 school students in 2 years near Palakkad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X