உலகின் ஈடு இணையற்ற செல்பி.. வைரலாகும் கேரள முதல்வரின் போட்டோ.. குவியும் பாராட்டு!
திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வித்தியாசமான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார்கள். கேரளாவை ஆட்சி செய்த முதல்வர்களில் மிகவும் சிறப்பானவர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
கேரளாவில் மழை வெள்ளம் வந்த போது மக்கள் இவருக்கு பெரிய ஆதரவு தந்தனர். அப்போது இவர் செய்த பணிகள் எல்லாம் பெரிய வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி

அளித்தார்
இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவர் இன்று சந்தித்தார். கேரளா வெள்ளத்திற்காக அவர் நிதி உதவி வழங்கினார். முதல்வரின் தனிப்பட்ட நிவாரண நிதிக்கு அவர் பணம் கொடுத்தார்.

கைகள் இல்லை
இந்த நிதி உதவி வழங்கிய சிறுவனுக்கு கைகள் இல்லை. இதனால் அவர் தன்னுடைய கால்கள் மூலம் இந்த பணத்தை கொடுத்தார். அதோடு இவர் தன்னுடைய காலால் முதல்வர் பினராயி விஜயன் உடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
|
அட
முதல்வர் எந்த விதமான பந்தாவும் இன்றி அந்த சிறுவன் காலால் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டார். அதோடு, காலால் எடுக்கும் செல்பியில் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது.
|
செம சார்
இந்த உலகத்தின் ஈடு இணையற்ற செல்பி இது என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!