திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசி தரூரை மொத்தமாக எதிர்க்கும் கேரள காங்கிரஸ்.. வெடித்தது பிரச்சனை.. டெல்லிக்கு பாய்ந்த போன் கால்!

கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவராக இருப்பவர்தான் எம்பி சசி தரூர். தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர்களில் கவனிக்கப்படும் தலைவர்களில் இவரும் ஒருவர்.

இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் கூட, அவ்வப்போது பாஜகவின் கொள்கை கொண்ட நபர் போல பேசுவது வழக்கும். அதேபோல் தேசியவாத கொள்கைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதும் வழக்கம்.

சட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு சட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு

எப்படி தொடக்கம்

எப்படி தொடக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசினார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியில் சில நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. அவரின் ஆட்சியை முழுக்க முழுக்க மோசமான ஆட்சி என்று கூறி விட முடியாது என்று கூறினார்,

சர்ச்சையில் சிக்கினார்

சர்ச்சையில் சிக்கினார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஆனால் இவர் பெரிதாக விமர்சனத்தில் சிக்கவில்லை. தற்போது இவரை ஆதரித்து கருத்து சொல்லி சசி தரூர் சிக்கலில் மாட்டி இருக்கிறார். ஆம் சசி தரூரும் மோடியின் ஆட்சிக்கு ஆதரவாக கருத்து சொன்னார்.

என்ன கருத்து

என்ன கருத்து

ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக பேசிய சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ் சொன்னதை நான் ஆதரிக்கிறேன். ஒருவர் நல்லது செய்யும் போது நாம் அதை பாராட்ட வேண்டும். மோடி நல்லது செய்தால் அதை நாம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் நாம் பேசுவதற்கு மதிப்பு இருக்கும். நாம் பேசுவது உண்மைதான் என்று மக்களுக்கு புரியும். நாம் விமர்சனம் செய்வதை அப்போதுதான் மக்கள் மதிப்பார்கள் என்று கூறினார்.

மோசம்

மோசம்

இதற்குத்தான் தற்போது கேரள காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் சபரிமலை பிரச்சனைக்கு பிறகு பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் கேரளாவில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் சசிதரூர் இப்படி பேசுவது தவறு என்று கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட எல்லோரும்

கிட்டத்தட்ட எல்லோரும்

தேர்தலை வைத்துக் கொண்டு அவர் இப்படி சொல்ல கூடாது என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட கேரளா காங்கிரசில் உள்ள 90% சதவிகித தலைவர்கள் சசி தரூருக்கு எதிராக தற்போது பேசி உள்ளனர். மோடி ஏற்கனவே நாடு முழுக்க பிரபலம். அவரை ஏன் புகழ்ந்து மீண்டும் சசி தரூர் பிரபலப்படுத்த நினைக்கிறார். ஏன் அவர் இப்படி பேசுகிறார் என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மூத்த தலைவர் முரளிதரன் ஆகியோர் சசி தரூருக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தேசிய தலைவர் சோனியா காந்தியிடம் போன் செய்து புகார் அளித்துள்ளார்.

பாஜகவில் சேர்கிறாரா?

பாஜகவில் சேர்கிறாரா?

இது தொடர்பாக சசி தரூர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு கேரள காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. சில காங்கிரஸ் தலைவர்கள், சசி தரூர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்கு பாஜகவில் சேர்ந்து விடலாம், என்று கூறியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் முரளிதரன், சசி தரூர் பாஜகவில் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Shashi Tharoor comment on Modi sparks a fire in Kerala Congress party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X