• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ராமரை விட மோடியை பெரியவரா காட்டுறீங்களே.. இதுதான் நீங்கள் கற்றுக் கொண்டதா.. சசி தரூர் கடும் கோபம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ராமரை சிறுவனாகவும், பிரதமர் மோடியை பெரியவராகவும் சித்தரிக்கும் படத்தை பாஜகவினர் ஷேர் செய்து வருவதை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவையொட்டி, சமூக வலைத்தளங்களில் ராம பக்தர்கள் மற்றும் பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் என்ற ஹேஷ்டேக்குடன் கருத்துக்கள் மற்றும் படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படித்தான், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஷோபா கரந்தலாஜே ஒரு படத்தை ட்வீட் செய்துள்ளார்.

அதில், பிரதமர் மோடி ராம பிரான் கைகளை பிடித்து கோயிலை நோக்கிச் செல்கிறார். இதில், ராம் பகவான் சிறியவராகவும், பிரதமர் மோடி பெரியவராகவும் காட்டப்படுகிறார். அயோத்தி அதன் அன்புக்குரிய ராஜாவை திரும்ப தனது இல்லத்திற்கு வரவேற்கிறது என்று ஷோபா கூறியிருந்தார்.

பாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக.5-களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றிய பிரதமர் மோடி பாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக.5-களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றிய பிரதமர் மோடி

  ராமர் கோவிலும்.. மோடியின் 30 வருட சபதமும்!
  ராமரை விட நீங்கள் பெரியவரா

  ராமரை விட நீங்கள் பெரியவரா

  இதை ரீடிவிட் செய்துள்ளார், சசி தரூர். அவர் ஹிந்தியில் இதுபற்றி கருத்து கூறுகையில், "அன்பும் கற்றுக்கொள்ளப்படுவதில்லை, இரக்கத்தைக் கற்றுக் கொள்ளவில்லை, பாசத்தையும் கற்றுக்கொள்ளவில்லை, ராமரை விட உங்களை பெரிதாகக் காட்டுவதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அப்படியானால், ஸ்ரீராம சரிதத்தில் எந்த பகுதி உங்களால் கற்றுக்கொள்ளப்படுகிறது? என்று சொல்ல முடியுமா" என வினவியுள்ளார். ஆனால், அயோத்தியில் குழந்தை வடிவில், ராமர் வழிபடப்படுவதால், இவ்வாறு புகைப்படம் உலவுவதாக பாஜக ஆதரவாளர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

  அமித் ஷா நன்றி

  அமித் ஷா நன்றி

  இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பல நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது. இன்று, பிரதமர் மற்றும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ஆகியோர் ராமர் கோயில் பூமி பூஜை செய்வதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மதிக்கும் பணியை செய்துள்ளனர், இதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  வேலை வாய்ப்பு

  வேலை வாய்ப்பு

  ஸ்ரீ ராமரின் லட்சியங்களும், எண்ணங்களும் இந்தியாவின் ஆன்மாவில் வாழ்கின்றன. ராமரின் குணமும், வாழ்க்கைத் தத்துவமும் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாகும். ராமர் கோயில் கட்டப்படுவதால், இந்த புனிதமான நிலம் அதன் முழு மகிமையுடன் உலகில் மீண்டும் உயரும். மதம் மற்றும் வளர்ச்சியின் ஒருங்கிணைப்பால் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

  மோடிக்கு வாழ்த்து

  மோடிக்கு வாழ்த்து

  இந்த பிரமாண்டமான பிரபு ஸ்ரீ ராம் கோயிலின் கட்டுமானம் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான மற்றும் தீர்க்கமான தலைமையைக் காட்டுகிறது. இந்த மறக்க முடியாத நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.

  English summary
  Senior Congress leader and former Union Minister Shashi Tharoor has criticized the BJP for sharing a picture of Rama as a boy and Prime Minister Modi as an big man.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X