தேங்காய் தானே உடைச்சேன்; அதை வைத்து இத்தனை மீம்ஸா..ரசித்த சசிதரூர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஓணம் பண்டிகையின்போது, கோவிலில் தேங்காய் உடைத்த விஷயம்தான் இப்போது நாடு முழுக்க மீம்ஸ்சாக சுற்றி வருகிறது.
இதில் என்ன இருக்கிறது.. தேங்காய் உடைப்பது, இந்துக்கள் வழிபாட்டு முறையின் ஒரு அங்கம்தானே என்று நீங்கள் கேட்கலாம். தேங்காய் உடைத்த விதம்தான் மீம்களுக்கு காரணம்.
அவர் ஒரு கையில் தேங்காயை வைத்துக் கொண்டு ஓங்கி, இன்னொரு கை அதே நேரம் பூமியை பார்க்கும் வகையில் இருந்ததால், ஏதோ நடனம் ஆடுவது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தியது.
எனவே நெட்டிசன்கள் அதையே வித்தியாசமாக யோசித்து மீம் போடத் தொடங்கிவிட்டனர். இதை சசிதரூர் கூட ரசிக்கிறார். அவரே தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் சுவாரசிய மீம்ஸ்களை ஷேர் செய்துள்ளார்.
சுனந்தா புஷ்கர் மரணம்.. சசி தரூரை வழக்கில் இருந்து விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

இதுதான் மீம்ஸ்
முதல் படத்தில் சசி தரூர் தேங்காய் உடைக்கும் காட்சி உள்ளது. அடுத்தடுத்த படங்களில் தேங்காய்க்கு பதில், டீ ஆற்றும் கோப்பை, தேங்காயை எடுத்துவிட்டு பரதம் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளன. மல்யுத்தத்தில் குத்தும்போது இப்படித்தானே கையை ஓங்குவார்கள் என்று சித்தரிக்கும் அளவுக்கு போய் விட்டன மீம்ஸ்கள்.

சசி தரூர் என்ட்ரி
தி பாஸ்ட் அன்டு தி ப்யூரியஸ் சசி தரூர் என்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை குதிரையை ஓட விட்டுள்ளது இந்த மீம்.

துணி துவைத்தால் இப்படி
டீ ஆற்றுவதை விடுங்க, சசி தரூர் கையில் துணியை கொடுத்து அவர் துணி துவைப்பதை போல காட்டியுள்ளது இந்த மீம். அவர் நிற்கும் போஸ் அப்படி பொருந்தியுள்ளது போல.

கிரிக்கெட்
தேங்காய்க்கு பதில், பந்தை கையில் கொடுத்தால், ஓஹோ.. ரன் அவுட் வாய்ப்புக்கு வாய்ப்பு இருக்கே. இதுதான் இந்த மீம். அதையும் சசி தரூர் ஷேர் செய்துள்ளார்.