திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அணலி, கருமூர்க்கன்".. வாய் பேச இயலாத மனைவி மீது பாம்பை ஏவி.. அலறகூட முடியாமல் துடித்தே இறந்த கொடுமை

மனைவி மீது பாம்பை ஏவி கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தூங்கி கொண்டிருந்த உத்ரா மீது பாம்பை தூக்கி வீசியுள்ளார் கணவர்.. வாய் பேச முடியாத உத்ராவால் அலறகூட முடியவில்லை.. 2 முறை அந்த நாகம் கொத்தியதுமே உயிர் படுக்கையிலேயே பிரிந்துவிட்டது. உத்ரா இறந்து 3 நாள் ஆகியும் இந்த கேரள மாநில சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் மக்களை விட்டு நீங்கவில்லை.

Recommended Video

    பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது.. ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் ஒருநாள் இரவு உத்ரா தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது அவரது காலில் திடீரென ஏதோ கடித்துவிடவும் அலறி எழுந்து துடித்துள்ளார்.. இதை பார்த்து பதறிய கணவனும் உத்ராவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.. அப்போதுதான், அணலி வகை பாம்பு ஒன்று உத்ராவை கடித்திருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

    துணை பொதுச் செயலாளர் பதவி... ஏற கட்ட நினைத்த திமுக சீனியர்கள்.. எகிறி அடித்த ஆ. ராசாதுணை பொதுச் செயலாளர் பதவி... ஏற கட்ட நினைத்த திமுக சீனியர்கள்.. எகிறி அடித்த ஆ. ராசா

     உடம்பெல்லாம் விஷம்

    உடம்பெல்லாம் விஷம்

    இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி தூங்கி கொண்டிருந்த மகளை எழுப்ப அவரது அம்மா ரூமுக்குள் வந்தார்.. அப்போது அசைவற்று படுக்கையில் கிடந்தார்.. வாயில் நுரை தள்ளியிருந்தது.. உடம்பெல்லாம் நீல கலரில் இருந்தது.. பாம்பு கடித்து உத்ரா இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது.

    விசாரணை

    விசாரணை

    அது எப்படி ஒரே ரூமில் உத்ராவை 2 முறை பாம்பு கடிக்கும் என்று சந்தேகம் எழவும் போலீசில் புகார் தரப்பட்டது.. அதன்படியே சூரஜ்ஜிடம் விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் நகைக்காக மனைவியை கொன்றது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அப்போது பல பகீர் தகவல்கள் வெளியாகியபடியே உள்ளன.

     சூரஜ்

    சூரஜ்

    உத்ரா ஒரு மாற்றுத்திறனாளியாம்.. வாய் பேச முடியாது... ஆசையாக வளர்த்த பெண்ணுக்கு எந்த குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் 100 சவரன் நகை, கார் என எல்லா சீரும் பெற்றோர் வீட்டில் செய்துள்ளனர்.. ஆனால் சூரஜ் 2-வது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.. இது தெரிந்து உத்ரா துடித்துபோய்விட்டார்.. இதனாலேயே தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

     தீண்டிய நாகம்

    தீண்டிய நாகம்

    மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார்.. திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.. முதல்முறை பெட்ரூமில் பாம்பு கடித்து உத்ரா அலறியபோது, சூரஜ்தான் அந்த பாம்பை பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. இப்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

    ஐடியாக்கள்

    ஐடியாக்கள்

    உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.. அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார்.

    சூரஜ்

    சூரஜ்

    உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது.. வாய் பேச முடியாத உத்ராவால் கத்தி அலறகூட முடியவில்லை.. படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. ஆனால் சூரஜ் எதுவும் நடக்கவில்லை என்பது போல விடிகாலையிலேயே ரூமை விட்டு கிளம்பி போய்விட்டார். ராத்திரி 8.30 மணிக்கே பாம்பு கடித்துள்ளது.. ஆனால் வீட்டில் காலையில்தான் உத்ரா வாயில் நுரைதள்ளி இருப்பதை கவனித்துள்ளனர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இந்நிலையில், பாம்பு பிடிக்க டிப்ஸ் கொடுத்த சுரேஷ் என்பவரின் மகன் போலீசில் சொல்லும்போது, "எலி தொல்லை இருப்பதாக என் அப்பாகிட்ட சூரஜ் சொன்னார்.. அப்பறம் ஒரு பாம்பை வாங்கிட்டு போனார்.. அதை எங்களுக்கு திருப்பி தரவே இல்லை.. திரும்பவும் ஒரு மாசம் கழித்து வந்து இன்னொரு பாம்பு கேட்டார்.. பேப்பரில் நியூஸ் பார்த்தபிறகுதான் அது உத்ராவை கடிக்க வைத்த பாம்பு என தெரிந்தது.. உடனே போலீசில் சொல்லிவிடுங்கள் என்று என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் கேட்கலை" என்றார். இதையடுத்து சுரேஷையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே விஷ பாம்பை கொன்று வீட்டுக்கு பின்புறம் புதைத்ததாக உத்ராவின் பெற்றோர் கூறியிருந்தனர்.. தற்போது அந்த பாம்பை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

    English summary
    snake biting: husband killed wife and confessed to kollam police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X