• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆபாச தளத்தில் 14 வயசில் நடிச்ச பலாத்கார காட்சிகள்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை.. கண்ணீர் வீடியோ

|

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த நடிகை சோனா ஆபிரகாம், ஒரு படத்திற்காக அரியாத வயதில் (14 வயதில்) நடித்த பாலியல் வன்கொடுமை காட்சிகள், ஆபாச இணையதளங்களில் வைரலாகியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ணீர் மல்க தெரிவித்த நடிகை சோனா, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசை வலியுறுத்தியுள்ளார்.

அரியாத வயதில் இளம் பெண் ஒருவர் மலையாள படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் பாலியல் வன்கொடுமை காட்சியில் நடித்திருக்கிறார். அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லலை. பள்ளிக்கு படிக்க போய்விட்டார். 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் நடித்த பாலியல் வன்கொடுமை காட்சி மட்டும் இணையத்தில் வெட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அந்த காட்சி படம் வெளியான போது அதில் இடம் பெறவில்லை. அந்த காட்சிகள், எடிட்டர், இயக்குனரிடம் மட்டுமே இருந்திருக்கிறது. அது தற்போது ஆபாச வலைதளத்தில் வைரலாகி இருப்பதால் அந்த பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி உள்ளது.

தங்கையாக நடித்தேன்

தங்கையாக நடித்தேன்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஷோனா ஆபிரகாம். இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்பு எனது 14 வயதில் ஃபார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் காதல் சந்தியா ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். அவருக்கு தங்கையாக நான் நடித்திருந்தேன்.

தற்கொலை செய்து கொள்வார்

தற்கொலை செய்து கொள்வார்

இந்த படத்தில் கதைப்படி என்னை பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை பார்க்கும் சந்தியா மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் சமூகத்துக்கு என்ன கருத்தை சொல்ல வந்தார் என்பது எனக்கு இப்போது வரை புரியவில்லை .

14 வயதில் நடித்தேன்

14 வயதில் நடித்தேன்

அறியாத வயதில் அந்த படத்தில் நடித்தேன். கதைப்படி பலாத்கார காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் அப்போது என்னிடம் கேட்டார். நான் 150 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தன்னால் அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறினேன். இதையடுத்து கொச்சியில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் அந்த காட்சி படமாக்கப்பட்டடது. அதன் பிறகு தான் பள்ளி படிப்புக்கு சென்றுவிட்டேன்.

கசிய விட்டது யார்

கசிய விட்டது யார்

இந்த நிலையில், நான் 12ம் வகுப்பு படித்தபோது சினிமாவில் இடம்பெறாத அந்த பாலியல் வன்கொடுமை காட்சிகள் ஆபாச இணைய தளங்களில் வெளியாகியது. இது எனக்கும், தன் குடும்பத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2013 ஆம் ஆண்டு நடித்த இந்த காட்சிக்காக பலமுறை நான் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்.. சினிமாவில் இடம்பெறாத பாலியல் வன்கொடுமை காட்சிகளை இணையத்தில் கசியவிட்டது யார்? என்று தெரியவில்லை.

எந்த நடவடிக்கையும் இல்லை

எந்த நடவடிக்கையும் இல்லை

இந்த வீடியோவை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் தன்னை சந்தேக கண்ணுடன் பார்க்கிறார்கள். பலர் தனக்கு போன்செய்து திட்டினார்கள்., இதனால் நானும், தனது பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி (கண்ணீர் மல்க கூறினார்) உள்ளோம். இதுபற்றி கேரள முதல்வர், டிஜிபி, சைபர் கிரைம் போலீசார் உட்பட பலரிடம் புகார் கூறினோம். வீடியோவை நீக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..

ஷோனா ஆபிரகாம் கண்ணீர்

சினிமாவில் இடம்பெறாத அந்த காட்சிகள் இயக்குநர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருந்ததாகவும், அவர்களுக்கு தெரியாமல் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. இந்த வீடியோவால் மனம் உடைந்த தான் பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்" இவ்வாறு வேதனையுடன் ஷோனா ஆபிரகாம் வீடியோவில் கூறினார்.

 
 
 
English summary
Actress Shona Abraham from Kerala has tried to commit suicide several times after being sexually harassed for appearing at a young age (at the age of 14) for a film, which went viral on pornographic websites. Actress Sona said this in tears she urged the Kerala government to take action.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X