திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலைக்கு போகும் சாமிகளே.. புல்லட்ல போங்க.. வாடகைக்கு விடுறது யாரு தெரியுமா? செம்ம திட்டம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 'புல்லட்' பைக்குகளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை செங்கானூர் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்த்திகை மாதம் துவங்கிய நாளில் இருந்து சபரிமலை சீசன் துவங்கியது. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க தினமும் லடசக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

அவர்கள் பேருந்து, கார், வேன், உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகிறார்கள். இந்நிலையில் ரயிலில் வரும் பயணிகள் நேராக பம்பை வரை புல்லட் செல்லும் வகையில் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

பம்பை செல்ல

பம்பை செல்ல

பக்தர்களின் வசதிக்காக பம்பை வரையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'புல்லட்' பைக்குளை வாடகைக்கு தெற்கு ரயில்வே விடுகிறது. கொச்சியில் பைக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை ரயில்வே நிர்வாகம் பம்பைக்கு மிக அருகில் உள்ள செங்கானூர் ரயில் நிலையத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி துவக்கி உள்ளது.

27 கி.மீ தூரம்

27 கி.மீ தூரம்

செங்கனூரில் இருந்து பம்பைக்கு மொத்தம் 83 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த சாலையில் புல்லட் மூலம் பக்தர்கள் இனி பயணிக்க முடியும். எனவே இதற்காக செங்கனூர் ரயில் நிலையத்தில் புல்லட்டை முன்பதிவு செய்து வாங்கி கொண்டு புறப்படலாம்.

100 கூடுதலாக கட்டணம்

100 கூடுதலாக கட்டணம்

வாடகையாக நாள் ஒன்றுக்கு (குறைந்தது 200கி.மீ.,) ரூ.1200 வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

விரைவில் நீட்டிப்பு

விரைவில் நீட்டிப்பு

திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ரயில் நிலையங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

English summary
southern railway launched bullet bike to rental for sabarimala pamba travels in chengannur railway station from november 28th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X