திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிதும் எதிர்பார்த்த.. தென் மேற்கு பருவமழை காலம் தாமதமாகிறது.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் துவங்கக் கூடிய தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் நான்கு நாட்கள் தாமதமாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த பருவமழை காலம் என்பது, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மழையை தரக்கூடியது. விவசாய உற்பத்திக்கு, பெரிதும் முக்கியம் தரும், முக்கியத்துவம் வாய்ந்த பருவ மழை கால கட்டம் இதுதான்.

எனவே, தென்மேற்கு பருவமழை காலம் எப்போது துவங்கும் என்பதில் விவசாயம் மட்டுமின்றி பொருளாதாரம் சார்ந்த கண்ணோட்டமும் இருப்பது வழக்கம்.

வங்கக் கடலில் நாளை உருவாகும் ஆம்பன் புயல்.. 95 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும்.. கரையை கடப்பது எங்கே?வங்கக் கடலில் நாளை உருவாகும் ஆம்பன் புயல்.. 95 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும்.. கரையை கடப்பது எங்கே?

ஜூன் 1

ஜூன் 1

வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் கால்பதிக்கும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற வடக்குப் பகுதிகளுக்கு நகர்ந்து செல்லும். இரண்டு மாத காலத்திற்கு நல்ல மழை பொழிவை கொடுக்கக்கூடியது இந்த பருவமழை காலம் தான்.

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை காலம் என்பது ஜூன் 5 ஆம் தேதி வாக்கில் துவங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. பருவமழை துவங்குவது தாமதித்தால், பொதுவாக மழையின் அளவு குறைவாக இருக்கும்.

எப்படி பெய்யும்

எப்படி பெய்யும்

அதேநேரம், சில நேரங்களில் எதிர்பார்ப்பை விட மிக அதிகமாகவும் மழை இருக்கும். மும்பை போன்ற மகாராஷ்டிராவின் சில பகுதிகள் இவ்வாறான பெருமழை காலத்தில் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கை. இந்த முறை எந்த மாதிரியான மழைப்பொழிவு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    நீருக்கும் கொரோனா வைரசுக்கும் உள்ள தொடர்பு என்ன?
    நல்ல மழை பெய்யுமா

    நல்ல மழை பெய்யுமா

    பருவமழை தள்ளிப் போக கூடிய விஷயம் என்பது கண்டிப்பாக விவசாயிகளுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். ஆனால் தாமதமாக வந்தாலும் அதிக அளவு மழைப்பொழிவை கொடுத்தால் விவசாயிகள் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Southwest monsoon this year will get delay as Kerala is likely to be received its first spell on June 5th onely instead of June 1, says the India Meteorological Department on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X