திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!

இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்துள்ள டிவிட்டுகள் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்துள்ள டிவிட்டுகள் பெரிய வைரலாகி உள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்து மக்கள் இடையே கடுமையான கோபத்தை வரவழைத்து இருக்கிறது. முக்கியமாக தென்னிந்திய மக்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது.

மகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்மகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்

கடுமை

கடுமை

இந்தியாவில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகமும், கர்நாடகாவும், வங்கமும் தீவிரமாக நடத்தி வருகிறது. தற்போது அந்த போராட்டத்தில் கேரளாவும் இணைந்துள்ளது. இந்த நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட் செய்துள்ளார்.

என்ன செய்துள்ளார்

அவர் தனது டிவிட்டில், இந்தி இந்தியாவை ஒன்றிணைக்கும் என்று கூறுவதை விட பெரிய அபத்தம் கிடையாது. அந்த மொழி பல இந்தியர்களுக்கு தாய் மொழி கூட கிடையாது. அப்படிப்பட்ட மொழியை மக்கள் மீது திணிக்க நினைப்பது அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமம். இந்தி பேசாத மக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர் முழுக்கம் இது.

இந்தியா

இந்தியா

எந்த ஒரு இந்தியனும் மொழியை வைத்து அந்நியமாக நடத்தப்பட கூடாது. இந்தியாவின் பலமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். தன்னுடைய பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும். சூழ்ச்சிகளை மக்கள் பார்த்து உணர்ந்து கொள்வார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன உண்மை

மக்களை உண்மையான பிரச்சனையில் இருந்து திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது தெரியும், என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

கேரள மக்கள்

கேரள மக்கள்

பினராயி விஜயனின் டிவிட்டை தொடர்ந்து மலையாளிகள் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். #StopHindiImposition டேக்கை நேற்று தமிழர்களும், கன்னட மக்களும் வைரலாக்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது மலையாளிகளும் இதில் வரிசையாக டிவிட் செய்ய தொடங்கி உள்ளனர்.

English summary
Stop Hindi Imposition: CM Pinarayi Vijayan tweet triggers the trend in Kerala too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X