திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூசைட் ஸ்குவாட்.. தூங்கும் புரட்சி.. பெண்கள் நுழைவை தடுக்க நடக்கும் புதுப்புது சபரிமலை போராட்டம்!

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலைக்குள் பெண்கள் நுழைய கூடாது.. கேரளாவில் சட்டசபை முற்றுகை-வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு நாளை அமல்படுத்தப்பட உள்ளது.

    இந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே கேரளாவில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து உள்ளது.

    நாளை செல்கிறார்கள்

    நாளை செல்கிறார்கள்

    நாளைத்தான் அந்த அதிசயம் நடக்க போகிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நாளைத்தான் நுழைய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்பு இதற்காக அதிகப்படுத்தபட்டுள்ளது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதற்காக கடும் எதிர்ப்பு நிலவும் சூழ்நிலையில், பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்க பல்வேறு போராட்டங்களை இந்துத்துவா அமைப்புகள் கடைபிடிக்க உள்ளது. அதன்படி, நாளை கோவிலை சுற்றி மனித அரண் அமைக்க இருக்கிறார்களாம். நாளை கோவிலுக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் அரண் அமைக்க இருக்கிறார்களாம். ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி அரண் அமைக்க உள்ளனர்.

    தூங்க போகிறார்கள்

    தூங்க போகிறார்கள்

    அதேபோல், கோவிலுக்குள் செல்லும் பாதைகளில் படுத்து தூங்கவும் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆம், இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள், கோவிலுக்குள் செல்லும் பாதை முழுக்க தூங்க போவதாகவும், யாரும் வர முடியாத படி இடத்தை அடைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

    சூசைட் ஸ்குவாட் முடிவு

    சூசைட் ஸ்குவாட் முடிவு

    அதேபோல் சிவசேனா சூசைட் ஸ்குவாட் ஒன்றும் வித்தியாசமான போராட்டத்திற்கு தயாராகி உள்ளது. அதாவது சிவசேனா தற்கொலை படை ஒன்று தற்போது கேரளாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தால் சிவசேனவை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்வார்களாம். அதன்பின் வரிசையாக தற்கொலை செய்து போராட்டம் செய்ய போகிறார்களாம்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இதனால் கேரளாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. கேரளாவில் சபரிமலையை சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் தீர்ப்பை செயல்படுத்த இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்றும் சபரிமலை தேவசம் போர்ட் அறிவுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    English summary
    Suicide squad, Sleeping protest, Sabarimala Protesters planned to stop women with unique ideas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X