• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செம.. தாலி கட்டி கொள்ள.. மணமேடைக்கு வந்த சுருதி.. டக்குனு "அந்த" கேள்வியை கேட்ட மாப்ளை.. சதீஷ் சபாஷ்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உடம்பெல்லாம் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு சுருதி வந்து நின்றார்.. அப்போதுதான் இப்படிப்பட்ட சிறப்பு சம்பவம் நடந்துள்ளது..!

கேரளாவில் சமீப காலமாகவே வரதட்சணை பிரச்சனை பெரும் பிரச்சனையாகி வருகிறது.. படித்த மாநிலம் என்ற பெயர் பெற்ற மாநிலத்தில் இப்படி ஒரு கொடுமையா என்ற அதிர்ச்சி இந்தியாவையே பீடித்துள்ளது.

குறிப்பாக, கடந்த மாதம் மட்டும் 3 பெண்களின் மரணங்கள்தான் இந்த பிரச்சனையை மேலும் உலுக்கி எடுத்துவிட்டது..

விஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள் விஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள்

பட்டதாரிகள்

பட்டதாரிகள்

அந்த 3 பேருமே இளம்பெண்கள்.. 3 பேருமே காலேஜ் படித்த பட்டதாரிகள்.. 3 பேருக்குமே சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.. 3 பேருமே மர்மமான முறையில் உயிரிழந்தனர்.. 3 பேரின் குடும்பத்திலும் இது கொலைதான் என்று அந்தந்த பெண்களின் பெற்றோர்கள் கதறி கொண்டிருக்கிறார்கள்.

தாக்கம்

தாக்கம்

இதனால், நடிகர் மோகன்லால் முதல் திமுக எம்பி கனிமொழி வரை இதுகுறித்த கண்டனங்களை தெரிவித்ததுடன், வரதட்சணைக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டிருந்தது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனிடையே, வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருந்தது இதன் தாக்கத்தை மேலும் அதிகமாக்கியது.

கல்யாணம்

கல்யாணம்

இப்படிப்பட்ட சூழலில்தான், இளைஞர் ஒருவர் மொத்த கேரளாவையும் திரும்பி பார்க்கும்படி ஒரு கல்யாணத்தை செய்து கொண்டுள்ளார்.. அந்த இளைஞர் ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர்.. பெயர் சதீஷ்.. 28 வயதாகிறது.. இவர் ஒரு நாதஸ்வர இசைக்கலைஞர்.

வரதட்சணை

வரதட்சணை

இவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் கல்யாணம் நிச்சயமானது.. நிச்சயதார்த்தத்தின்போதே, தனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று சதீஷ் உறுதியாக பெண் வீட்டில் சொல்லி இருந்தார்.. கடந்த மே 13-ந் தேதி இவர்களுக்கு திருமண நாள் குறித்திருந்தார்கள்.. ஆனால் லாக்டவுன் காரணமாக கல்யாணம் தள்ளி போனது.

சுருதி

சுருதி

தற்போது 2 மாதத்துக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒரு கோவிலில் எளிமையாக இந்த கல்யாணம் நடந்தது.. அப்போது கல்யாண பெண் சுருதி தன் வீட்டில் சீதனமாக தந்த 50 பவுன் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு வந்தார்... அப்போது மணமகன் சதீசும் அங்கு வந்தார்.. அப்போதுதான், சுருதியின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கண்டார்...

வியப்பு

வியப்பு

உடனே சுருதியிடம், "நான்தான் வரதட்சணை, சீர் எதுவுமே வேண்டாம் என்று சொன்னேனே.. என் கொள்கையே கட்டின புடவையோடு நீ வரணும் என்பதுதான்.. வேணும்னா 2 வளையல்களை மட்டும் போட்டுக்கோ.. மீதி நகைகளை கழற்றி உன் அப்பா, அம்மாவிடமே தந்துடு" என்றார்... இதை கேட்டு சுருதி வியப்படைந்தார்.. பின்னர் தாலி கட்டியவுடன் சுருதி கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சபாஷ்

சபாஷ்

கட்டிய தாலியுடன் சுருதியை மனைவியாக சுதீஷூம் ஏற்றுக் கொண்டார்.. கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருமே சதீஷின் செயலை பாராட்டினர்.. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருப்பதால், மாப்பிள்ளைக்கு பாராட்டும், மணமக்களுக்கு வாழ்த்தும் குவிந்து கொண்டிருக்கிறது..!

English summary
Super incident: No gold no luxury Marriage Kozhikode couple, and viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X