திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவனந்தபுரம் பூந்துராவில் 'சூப்பர் ஸ்ப்ரெட்டாக' மாறிய கொரோனா.. பரவலை தடுக்க கமாண்டோக்கள் குவிப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: திருவந்தபுரத்தின் பூந்துரா பகுதியில் கொரோனா வைரஸ் சூப்பர் ஸ்ப்ரெட்டாக மாறியிருப்பதால் அங்கு சிறப்பு ஆயுதப்படை (எஸ்ஏபி) கமாண்டோக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    Coronavirus Spread In Air? | Covid-19 airborne threat | Experts Warning

    கேரளாவில் ஒரே நாளில் மிக உச்சபட்சமாக கொரோனா பாதிப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. 301 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதில் 90 பேர் தொடர்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். திருவனந்தபுரத்தில் மட்டும் நேற்று 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளளது.

    திருவனந்தபுரத்தின் பூந்துராவில் கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக பரவி வருகிறது. அந்த பகுதி முழுவதும் கொரோனா சூப்பர் ஸ்ப்ரெட்டாகிவிட்டது என தேவஸ்தானம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். கொரோனாவின் இத்தகைய விரைவான பரவல் அருகிலுள்ள வேறு எந்த பகுதியிலும் இல்லை என்றார்.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்

     கமாண்டோக்கள் குவிப்பு

    கமாண்டோக்கள் குவிப்பு

    கடந்த ஐந்து நாட்களில் பூந்துரா பகுதியில் இருந்து பரிசோதிக்கப்பட்ட 600 மாதிரிகளில், 119 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு 120 முதன்மை தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் கமாண்டோக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

     முதல் கொத்து பரவல்

    முதல் கொத்து பரவல்

    பொது சுகாதார நிபுணரும், மாநிலத்தின் கோவிட் -19 மேலாண்மைக் குழுவின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் முகமது அஷீல் கூறுகையில், பூந்துராவில் ஒரு நபரால் ஆறுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சூப்பர் ஸ்ப்ரெட்ஆகிவிட்டது. கேரளாவில் வளர்ந்து வரும் முதல் கொத்து வெடிப்பாக பூந்துரா இருக்கலாம். எனினும் கடுமையான கிளஸ்டர் கட்டுப்பாட்டு உத்தி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன், இதை கட்டுப்படுத்துவோம்" என்றார்.

     கன்னியாகுமரி அருகில்

    கன்னியாகுமரி அருகில்

    பூந்துராவில் கொத்துபரவல் காரணமாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் திருவந்தபுரம் இடையே மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். பூந்துரா மற்றும் தமிழ்நாடு இடையே மீன்பிடி படகுகள் செல்வதைத் தடுக்க கடலோர பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா தெரிவித்தார்.

     உதவி கோருவோம்

    உதவி கோருவோம்

    சிறப்பு கடமைக்காக பூந்துராவில் எஸ்ஏபி எல் சாலமன் தலைமையில் இருபத்தைந்து கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளூர் மதத் தலைவர்களின் உதவியும் பெறப்படும். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் மக்கள் எல்லை தாண்டுவதை தடுப்பார்கள். இது தொடர்பாக தமிழக டிஜிபி கே திரிபாதியுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்" என்றார்.

     போலீசார் குவிப்பு

    போலீசார் குவிப்பு

    பூந்துராவில் துணை ஆணையர் திவ்யா வி கோபிநாத், உதவி ஆணையர் ஐஸ்வர்யா டோங்ரே ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுளளது. பூந்துராவின் மூன்று வார்டுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக கிடைக்கும். சோதனைகள் வரும் நாட்களில் நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

    English summary
    kerala Super Spreading of Covid-19 Detected In thiruvanthapuram's Poonthura Area, Commandos Deployed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X