India
 • search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பில் வெறும் வெள்ளைத்துணி அன்று.. கையில் தாலியுடன் வயல்வெளியில் ஓடும் மின்னல் முரளி இன்று.. வாவ்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வயல்வெளிக்குள் இங்குமங்கும் ஓடிச்சென்று, மாலை மாற்றிக் கொள்ளும் புதுமண தம்பதிகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது... என்ன காரணம்?

முன்பெல்லாம், திருமணத்துக்காக பெண்ணை பார்த்துவிட்டு போய்விட்டால், மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணின் போன் நம்பர் கூட தருவதை தவிர்ப்பார்கள்..

காரணம், ஆணை பற்றியோ, பெண்ணை பற்றியோ கல்யாணத்துக்கு முன்பே விசாரிக்க போய், ஏடாகூட விஷயங்கள் கேள்விப்பட்டு, பல கல்யாணங்கள் இதனால் தடைபட்டு போன துயரமும் நடந்துவிடக்கூடும் என்பதால்தான்..

பிக்பாஸ் அல்டிமேட்: ஓவியா எங்கே..அவருக்காகத் தான் இதை செய்தோம்..குழப்பத்தில் ரசிகர்கள் பிக்பாஸ் அல்டிமேட்: ஓவியா எங்கே..அவருக்காகத் தான் இதை செய்தோம்..குழப்பத்தில் ரசிகர்கள்

பிரபலம்

பிரபலம்

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.. திருமணத்துக்கு முன்பே போட்டோ ஷூட் வியாதி பிடித்துவிட்டது.. இப்படி ஒரு முறையை பிரபலப்படுத்தியதே கேரள மாநிலம்தான் போல... ஒன்றரை வருடத்துக்கு ஒரு திருமண ஜோடி, டீ எஸ்டேட்டில் போட்டோ ஷூட் நடத்தியது.. அந்த தோட்டத்தில் வெறும் வெள்ளை துணியை போர்வையாக போர்த்தி கொண்டு, சிரித்தபடியே ஓடித்திரிந்தார் மணப்பெண்.. அவரை துரத்திக் கொண்டே பிடிக்க மாப்பிள்ளை.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை..

 வெள்ளை துணி

வெள்ளை துணி

வெறும் வெள்ளை துணியை மட்டும் போர்த்தி கொண்டு இந்த போட்டோ ஷூட் எடுத்திருந்தனர். இதை பார்த்து நெட்டிசன்கள் திட்டி தீர்த்துவிட்டனர்.. சர்ச்சையாகவும் வெடித்தது.. ஆனாலும் இன்னொரு ஜோடி சேற்றுக்குள்ளேயே முங்கி போட்டோ ஷூட் நடத்தியது.. அவங்க 2 பேருக்குமே உடம்பெல்லாம் சேறு.. சகதி.. ப்ரீ வெட்டிங் வீடியோ, ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் என்ற பெயரில் எல்லை மீறும் கவர்ச்சியுடன் போட்டோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் வித்தியாசமான ஒரு போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்துள்ளது..

வரவேற்பு

வரவேற்பு

டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் "மின்னல் முரளி".. இந்த படம் இளைஞர் ஒருவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.. அதனால், இந்த படத்தின் கெட்டப்பை வைத்தே தன்னுடைய திருமணத்துக்கு முன்பான போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.. சூப்பர் ஹூரோ டிரஸ்ஸில் அவரது போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

 மின்னல் முரளி

மின்னல் முரளி

இந்த சம்பவமும் கேரளாவில்தான் நடந்துள்ளது.. கோட்டயத்தை சேர்ந்தவர் அந்த மாப்பிள்ளை.. பெயர் அமல் ரவீந்திரன்.. இவரே ஒரு போட்டோகிராபராம்.. அதனால், மின்னல் முரளி போல டிரஸ் அணிந்து, வயல்வெளிகளில் மணமகளுடன் ஓடிச்சென்று மாலை மாற்றி கொள்வதை போல அந்த வீடியோவை எடுத்துள்ளார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை


இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அது பலருக்கும் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இந்த போட்டோ ஷூட் அனுபவம் குறித்து மாப்பிள்ளை சொல்லும்போது, "முதலில் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தது.. இந்த ஷூட்டிற்கு வரும்போது பதட்டமாக இருந்தேன்... ஆனால், நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்று பூரித்து போய் சொல்கிறார்..

Recommended Video - Watch Now

  Minnal Murali | Guru Somasundaram | Hero, Villain இருவருக்கும் என்ன வித்யாசம் ? | Filmibeat Tamil
  பூரிப்பு

  பூரிப்பு

  ஆனால், இதே மின்னல் முரளி டிரஸ்ஸில், கேரள சுகாதாரத்துறையினரும் ஒரு கொரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தனர்.. அதேபோல போக்குவரத்துத் துறையினரும் சூப்பர் ஹூரோ கேரக்டரை பயன்படுத்தி அதிவேகத்தில் செல்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர்.. அந்த வரிசையில் இந்த புதுமாப்பிள்ளையும் சேர்ந்துள்ளார்.. நிஜமாகவே தனக்கு ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார் என்று கல்யாணப்பெண்ணும் சந்தோஷமாக சொல்கிறாராம்.. எப்படியோ, அரைகுறை டிரஸ்ஸில் அன்று ஆரம்பித்த வெட்டிங் ஷூட் இன்று அடுத்தக்கட்ட நாகரீக லெவலுக்கு முன்னேறி கொண்டுள்ளது வரவேற்கத்தக்கதே..!

  English summary
  Superhero: Groom shows up as Superhero Minnal murali for his Wedding Shoot in Kerala
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X