திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா ? அமைச்சர் வேலுமணி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா?- அமைச்சர் விளக்கம்- வீடியோ

    சென்னை: 20 லட்சம் லிட்டர் தருவதாக கேரளா அறிவித்ததை தமிழகம் நிராகரித்ததாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மறுத்துள்ளார்.

    கேரளாவில் கடந்த ஆண்டு மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்த மாநிலமும் சீர்குலைந்து போனது.இதையடுத்து தமிழகத்திலிருந்து கேரள மக்களுக்கு பெருமளவில் உதவிகள் குவிந்தன. இதை கேரள மக்களே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு தமிழக மக்கள் தங்களது மனித நேயத்தைக் காட்டினர்.

    The Kerala gov has come forward to provide 20 lakh liters of drinking water to Chennai

    சென்னையிலிருந்து மிகப் பெரிய அளவில் உதவிகள் போயின. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்தனர். ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கார்கள் என அனைத்து விதத்திலும் உதவிகள் கேரளாவுக்கு ஓடின.

    பால் பொருட்கள், குடிநீர், நாப்கின், அரிசி, மருந்துகள் என விதம் விதமான பொருட்களை டன் கணக்கில் சென்னை மக்கள் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். இப்போது அந்த நன்றியை கேரள மக்கள் நமக்குத் திருப்பிச் செலுத்தவுள்ளனராம்.

    அதாவது குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் சென்னைக்கு தண்ணீர் அனுப்பவுள்ளது கேரளா. திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மூலமாக இந்த தண்ணீர் அனுப்பப்பட உள்ளதாகவும், தூய்மையான முறையில் சுத்திகரிப்பு செய்த தண்ணீரை சென்னைக்கு கேரள அரசு அனுப்பி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

    The Kerala gov has come forward to provide 20 lakh liters of drinking water to Chennai

    தமிழக அரசு நிராகரித்ததா? வேலுமணி விளக்கம்

    இதனிடையே கேரளா தண்ணீர தர முன்வந்ததை தமிழக அரசு நிராகரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    மாண்புமிகு கேரள முதலமைச்சா் பினராயி விஜயனின் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார். முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும், குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.

    சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி உரிய முடிவினை அறிவிப்பார்கள். இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,

    இவ்வாறு அமைச்சா் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Police investigation: surveyor Asked bribe of Rs 10,000; shocked farmer died in Kumbakonam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X