திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறைய மாற போகிறது.. மிக மிக முக்கியமான விஷயம் பேசினோம்.. கேசிஆர் சந்திப்பிற்கு பின் பினராயி சூசகம்!

நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் நடந்த சந்திப்பு மிக மிக முக்கியமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரசேகர ராவுடன் சந்திப்பு குறித்து விளக்கிய பினராயி விஜயன்- வீடியோ

    திருவனந்தபுரம்: நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் நடந்த சந்திப்பு மிக மிக முக்கியமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

    The meeting was very important says Kerala CM after his meet with Telangana CM

    அதேபோல் இவர் இன்னும் சில தென்னிந்திய தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து பினராயி விஜயன் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

    நாங்கள் நீண்ட நேரம் இந்திய தேசிய அரசியல் குறித்து பேசினோம். முக்கியமாக தற்போது இருக்கும் மத்திய அரசு குறித்து பேசினோம். மத்திய அரசு மாநில அரசுகளை இத்தனை நாட்கள் ஏமாற்றி வந்தது.

    அது இனியும் நடக்காது. மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இனி மத்திய அரசு இருக்கும். நாங்கள் மிக மிக முக்கியமான விஷயம் பேசினோம். நாங்கள் பேசியது தேசிய அரசியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

     மு.க.ஸ்டாலினை கே.சி.ஆர். சந்திக்கிறார் என்பது வதந்தியாம்... கிளப்பிவிட்டது பாஜகவா? மு.க.ஸ்டாலினை கே.சி.ஆர். சந்திக்கிறார் என்பது வதந்தியாம்... கிளப்பிவிட்டது பாஜகவா?

    சந்திரசேகர ராவை பொறுத்தவரை மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறினார். பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் கூறினார். அதனால் மாநில கட்சிக்குத்தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    ஆனால் நாங்கள் வேறு விஷயம் எதுவும் பேசவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விதமான முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை, இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி உள்ளார்.

    English summary
    The meeting was 'very important' says Kerala CM after his meet with Telangana CM Chandra Sekhara Rao.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X