திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல் வாழ்த்து.. . நெகிழ்ந்து போய் பதில் அளித்த திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்!

Google Oneindia Tamil News

திருவந்தபுரம் : தன்னை வாழ்த்திய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்,

மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் "மாதர் படை" மாற்றத்திற்குத் தயாராகி விட்டது என்று அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.

 Thiruvananthapuram Mayor Arya Rajendran thanks to Kamal Haasan

இதற்கு பதில் அளித்துள்ள திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன். உலக நாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் என்னை மட்டுமல்லாமல் என்னைப் போன்ற மேலும் பல இளைஞர்களுக்கும் ஊக்குவிப்பதாக அமையும் என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டில் கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆர்யா ராஜேந்திரன் (21 வயது) திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். 100 உறுப்பினர்களை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆர்யா ராஜேந்திரன் மேயராக பொறுப்பேற்பதற்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

 Thiruvananthapuram Mayor Arya Rajendran thanks to Kamal Haasan

ஆர்யா ராஜேந்திரன் இன்று (28ம்தேதி) திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட கலெக்டர் பதவிப்பிரமானம் செய்துவைத்தார். ஆல் செயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு பயின்றுவரும் ஆர்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடவன்முகல் தொகுதியில் கவுன்சிலராக வெற்றிபெற்றார்.

ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர்.. அந்து துணிச்சல் உண்டா.. கமல் கேள்வி ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர்.. அந்து துணிச்சல் உண்டா.. கமல் கேள்வி

21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவிபெறும் பெண் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றிருக்கிர்.. கல்லூரி மாணவியான ஆர்யா இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார்.

English summary
Thiruvananthapuram Mayor Arya Rajendran thanked makkal neethi maiam party leader Kamal Haasan for congratulating her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X