திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேறு பெண்ணை திருமணம் செய்ய பில்லி சூனியம் வைத்த கணவன் - தற்கொலை செய்து கொண்ட தாய், மகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தாயும், மகளும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர்கள் எழுதிய தற்கொலைக் கடிதம் சிக்கியுள்ளது. அவர்களின் மரணத்திற்குக் காரணம் குடும்ப பிரச

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்களின் பெயர் லேகா, 42, வைஷ்ணவி 19, என்பதாகும். திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி, மகளுமாவார். கடன் பிரச்சினையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இருவரின் மரணத்திற்கும் சந்திரனும் அவரது அம்மாவுமே காரணம் என்று தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

சந்திரன் வெளி நாட்டில் வேலை செய்த போது வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ. 5 லட்சம் கடன் வாங்கினார். ஒரே மகள் செல்ல மகள் வைஷ்ணவி பெயரில் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடியேறினர். யாருக்கு கெட்ட நேரமோ வெளிநாட்டில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பி இங்கேயே வேலை செய்தார் சந்திரன். கடன் பிரச்சினை கழுத்தை நெரித்தது. வங்கியில் இருந்தும் கடன் கேட்டு நெருக்கடி அதிகரித்தது.

கடன் பிரச்சினை தீர வீட்டையும் நிலத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்தனர். கடந்த 14ஆம் தேதி வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் பேசி விட்டு வந்தார் லேகா. ஆனால் வீடு, நிலத்தை விற்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் லேகாவும், வைஷ்ணவியும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

மனைவியை அடிக்காதே என்ற சப் இன்ஸ்பெக்டர்... கள்ளத்தொடர்பு என வீடியோ போட்ட கணவன் - குமரியில் பரபரப்பு

வங்கிக்கடன் தொல்லை

வங்கிக்கடன் தொல்லை

தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரன், வங்கி அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே மனைவியும், மகளும் தீக்குளித்தனர் என்று கூறவே கேரளாவில் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் தற்கொலைக்குக் காரணம் கடன் பிரச்சினையில்லை குடும்பப் பிரச்சினை என்று மறுநாளே தெரியவந்தது.

 தற்கொலைக்கடிதம்

தற்கொலைக்கடிதம்

லேகாவும் வைஷ்ணவியும் தங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தனர். மூன்று பக்கம் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் எழுதப்பட்டிருந்தது. கணவர் சந்திரனும் அவருடைய தாயார் கிருஷ்ணாமும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார் லேகா. இந்த கொடுமைக்கு உறவினர்கள் சாந்தா, காசி ஆகியோரும் உடந்தை என்று எழுதப்பட்டிருந்தனது.

வேறு பெண்ணுடன் திருமணம்

வேறு பெண்ணுடன் திருமணம்

வெளிநாட்டில் இருந்து வந்த சந்திரன் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தார். தட்டிக்கேட்ட தன்னையும், மகள் வைஷ்ணவியையும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சி செய்தார். பில்லி சூனியத்தை ஏவினார் என்றும் எழுதியிருந்தார் லேகா. வங்கிக்கடன் கட்டாமல் பணத்தை ஊதாறித்தனமாக செலவு செய்யதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நால்வர் கைது

நால்வர் கைது

தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் சந்திரன், கிருஷ்ணம்மா உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஒருவரின் சுயநலத்தால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய வைஷ்ணவி, கல்லூரியில் லீடாராக இருந்து எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறன் படைத்தவராம். டாக்டராக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது என்று அவருடன் படித்த மாணவிகள் கூறினர். மகளின் ஆசையை நிறைவேற்ற பணத்தை ரெடி செய்து வந்தாராம் லேகா.

விபரீத முடிவு

விபரீத முடிவு

மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடி சென்று உதவும் குணம் படைத்தவராம் வைஷ்ணவி. ஆனால் அவருக்கு பெற்ற தந்தையே கொடுமை செய்திருக்கிறான். வீட்டுப்பிரச்சினை, கடன் பிரச்சினை என்று மாற்றி மாற்றி அழுத்த இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கின்றனர் என்று காவல்துறையினர் கூறினர்.

English summary
The twin suicide of a woman and her daughter Lekha and Vaishnavi near Neyyattinkara on May 14 which was suspected to be a case of harassment by a nationalised bank, has taken a new turn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X