திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகாவிலும் உச்சத்தை எட்டிய தக்காளி 1 கிலோ தக்காளி ரூ.160

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. கேரளாவில் தக்காளி விலை கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று, தக்காளி சில்லரை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Recommended Video

    சென்னை: மீண்டும் உயர்ந்த தக்காளி விலை: கன்னத்தில் கைவைக்கும் இல்லத்தரசிகள்!

    சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்று மொத்த 38 வாகனத்தில் 570 டன் தக்காளி வந்துள்ளது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவை உள்ள நிலையில் இன்று 2000 டன் வரத்து குறைவாக உள்ளது.

    Tomatoes has gone up to Rs 160 per kg in Kerala

    வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்து சந்தைக்கு வரத்து குறைவாக இருந்தது. விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ 180 ரூபாய் வரை குறைந்தது. தமிழகத்தில் பசுமை பண்ணை கடைகளில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த வாரத்தில் மழை குறைந்த நிலையில் தக்காளி விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல இப்போது கேரளாவிலும் கர்நாடகாவிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தக்காளி மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயாக உயர்ந்து உள்ளது. சில்லறை விற்பனை விலையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.

    தக்காளி சில்லறை மார்க்கெட்டில் கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலபார் மாகெட்டில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாக்கு விற்பனையாகிறது. இதனால் சில்லறை காய்கறிக் கடைகளில் தக்காளி விலை 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகளின் வீட்டு பட்ஜெட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்திலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. மங்களூரு மற்றும் துக்கூருவில் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும், தார்வார்டில், மைசூரு, ஷிவமோகா, பெங்களூருவில் கிலோ 70 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி, கத்தரிக்காய் கிலோ ரூ 100.. முருங்கைக்காய் ரூ 270-க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை! தக்காளி, கத்தரிக்காய் கிலோ ரூ 100.. முருங்கைக்காய் ரூ 270-க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை!

    தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. கனமழையால் விளைச்சல் குறைந்து வரத்தும் குறைந்துள்ளதால் இன்னும் சில தினங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடமாநிலங்களில் இன்றைய நிலவரப்படி தக்காளி சில்லறை விலையில் ஒரு கிலோவுக்கு 80 வரை விற்பனையாகிறது. மும்பையில் கிலோ ரூ.55க்கும், டெல்லியில் ரூ.56க்கும், கொல்கத்தாவில் கிலோ ரூ.80க்கும், இன்று விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை 1கிலோ 100 க்கும் சிறு மொத்த விற்பனை 120 க்கும் சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 120 முதல்140 ரூபாய் வரை மாற்றமின்றி விற்பனையாகிறது.

    English summary
    The wholesale price of tomato in Thiruvananthapuram, Kerala has gone up to Rs. 120 per kg. Similarly, the retail price of tomatoes has gone up to Rs 160 per kg. Tomato prices have risen to Rs 100 in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X