திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் இன்று முதல் 1 வார காலத்துக்கு மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    Kerala-வில் Lockdown விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு | Kerala Lockdown Extension

    நாட்டில் கேரளாவில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் மூலம் கொரோனா பரவுவதை வெற்றிகரமாக தடுத்தது கேரளா.

    கொரோனா: உலக நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா- மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் மட்டும் 60% பாதிப்பு கொரோனா: உலக நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா- மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் மட்டும் 60% பாதிப்பு

    மீண்டும் கொரோனா அச்சம்

    மீண்டும் கொரோனா அச்சம்

    பல மாநிலங்களுக்கும் கேரளாதான் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாகவும் இருக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,429. இதனையடுத்து கேரளாவில் அடுத்த ஆண்டு வரை லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் கேரளா அரசு நேற்று வெளியிட்டிருந்தது.

    அதி தீவிர லாக்டவுன்

    அதி தீவிர லாக்டவுன்

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாவதால் இம்மாவட்டத்தில் மட்டும் மிக அதிக கட்டுப்பாடுகளுடன் ஒரு வார காலத்துக்கு அதிதீவிர லாக்டவுன் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனை டிரிபிள் லாக்டவுன் என்று குறிப்பிடுகின்றனர். வழக்கமான லாக்டவுனை அதிக அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

    வெறிச்சோடிய சாலைகள்

    வெறிச்சோடிய சாலைகள்

    திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சுரேந்திரன், எரிமலையின் மீது அமர்ந்திருப்பது போல இருக்கிறது என கூறியிருந்தார். தற்போது டிரிபிள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருப்பதால் திருவனந்தபுரத்துக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மருந்து கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறந்திருக்கின்றன.

    அரசு அலுவலகங்கள் மூடல்

    அரசு அலுவலகங்கள் மூடல்

    மேலும் திருவனந்தபுரம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மிக அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு உணவுப் பொருட்களை வழங்க வருகிறவர்களுக்கும் கடுமையான பரிசோதனை நடத்தப்படும். திருவனந்தபுரத்தில் இன்று வாகனங்கள் எதுவும் இயங்கவும் அனுமதி இல்லை. தலைமை செயலகம், அரசு அலுவலகங்கள்,நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும்.

    English summary
    Triple Lockdown imposed in Thiruvananthapuram, Kerala For A Week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X