வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகள்தான் குறி.. உல்லாசம் + வசூல்.. 2 பேர் அதிரடி கைது
திருவனந்தபுரம் : வெளிநாட்டில் பணிபுரியும் நபர்களின் மனைவிகளை குறிவைத்து அவர்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததோடு பணம் பறித்து மோசடி செய்த நபர்களையும் பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு மோசடி நபர்களுடன் பல இடங்களில் சுற்றித்திரிந்த இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளம்பலம் பள்ளிகல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீமா. இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதேபோல கேரளா மாநிலம் இளமாடு பகுதியைச் சேர்ந்த நாஸியா என்பவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அடுத்த 2 வாரம் ரொம்ப முக்கியம்.. கவனமா இருங்க.. தமிழ்நாடு அரசு தந்த எச்சரிக்கை.. என்ன காரணம்?

பெண்கள் மாயம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்ற குழந்தைகளை விட்டுவிட்டு இரு பெண்களும் திடீரென மாயமாகினர். குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் தாயை காணாதது குறித்து உறவினர்கள் இருவரது கணவர்களுக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து பெண்கள் மாயமானது குறித்து பள்ளிகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான இரு பெண்களையும் தீவிரமாக தேடி வந்தனர் . அவர்களுக்கு செல்போன் மற்றும் வாட்ஸ்ஆப் உரையாடல்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியோடு விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை
மாயமான இரு பெண்களும் கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த சைன் மற்றும் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ஆகிய இருவருடன் ஓடிப் போனது தெரியவந்தது. மேலும் பெண்கள் இருவருக்கும் அவர்களுடன் முறையற்ற உறவு இருந்ததும் தெரியவந்தது ஆனாலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில் செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது இதையடுத்து குற்றாலம் நிறைந்த கேரளா போலீசார் ஜீமா, நாசியா, சைன், ரியாஸ் ஆகியோரை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து வந்தனர்.

அதிர்ச்சி தகவல்
கைது செய்யப்பட்ட ரியாஸ் மற்றும் சைன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் மனைவிகளை குறிவைத்து அவர்களுடன் இருவரும் தொடர்பு ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி உள்ளனர். மேலும் கணவர்கள் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்தி அவர்களை மயக்கி தனியே அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்தனர். மேலும் தங்களது வலையில் சிக்கும் பெண்களிடம் பணம் மற்றும் நகைகளை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

7 பெண்களிடம் மோசடி
இந்நிலையில்தான் ஜீமா மற்றும் நாசியாவை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதோடு, அவர்களை மைசூர் ஊட்டி கோவை குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் இதுவரை மொத்தம் ஏழு பெண்களை இருவரும் ஏமாற்றி பணம் பறித்த தோடு அவர்கள் வாழ்வை நாசம் செய்தது தெரியவந்துள்ளது வழக்குப்பதிவு செய்த போலீசார் யார் யாரிடம் இவர்கள் இருவரும் கைவரிசை காட்டினார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.