திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோகன்லாலுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறோம்.. உறுதிப்படுத்தியது பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP tries Mohanlal | மோகன்லாலை பாஜகவுக்கு வருமாறு தொடர்ந்து கேட்கிறோம்: பாஜக மூத்த தலைவர் அதிரடி

    திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லாலை, பாஜகவில் சேருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர் வருவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரியவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.

    தான் பலவீனமாக உள்ள மாநிலங்களில் எல்லாம், அங்கு பலமாக உள்ள உள்ளூர்ப் பிரபலங்களை இழுத்துப் போட்டு ஆதாயமடைய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிலரைக் குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது.

    அன்பாக கேட்டோ, அழுத்தம் கொடுத்தோ, நிர்ப்பந்தம் செய்தோ அவர்களை பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர்கள் நேரடியாக பாஜகவுக்குள் வராவிட்டாலும் கூட தங்களுக்கு சாதகமாக நடந்தால் போதும் என்ற அளவிலும் பாஜகவின் முயற்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    மோகன்லாலுக்கு குறி

    மோகன்லாலுக்கு குறி

    அந்த வகையில் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பாஜக குறி வைத்துள்ளது. நீண்ட காலமாகவே அவரை நோட்டம் விட்டு வந்த பாஜக தற்போது அவரை வளைத்துப் பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதை மூத்த தலைவர் ஓ.ராஜகோபாலே ஒத்துக் கொண்டுள்ளார்.

    ஓ.ராஜகோபால்

    ஓ.ராஜகோபால்

    90 வயதான ஓ.ராஜகோபால் கடந்த லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூருக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். தற்போது சபரிமலை விவகாரத்தை வைத்து ஆதாயம் தேடும் முயற்சிகளில் கேரள பாஜக தீவிரமாக உள்ளது. பாஜகவுக்கு ஒத்த கருத்துக்களை தொடர்ந்து கூறி வருபவர் மோகன்லால். இதனால் அவருக்கு பாஜக ஸ்கெட்ச் போட்டுள்ளது.

     ஒரே இடத்தில் செய்யலாம்

    ஒரே இடத்தில் செய்யலாம்

    இதுகுறித்து ஓ.ராஜகோபால் கூறுகையில், மோகன்லால் பாஜகவுக்கு ஒத்த கருத்துக்களைக் கூறி வருபவர். இருவரது சிந்தனையும், செயல்பாடுகளும் ஒன்றுதான் அதை ஒரே இடத்தில் இருந்து செய்யலாம். எனவேதான் மோகன்லாலை பாஜகவுக்கு வருமாறு தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

    ஏற்பாரா, இல்லையா?

    ஏற்பாரா, இல்லையா?

    மோகன்லால் போன்ற ஒருவரை திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த விரும்புகிறோம். அவரது சொந்த ஊரும் திருவனந்தபுரம்தான். ஆனால் எங்களது முடிவை அவர் ஏற்பாரா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எங்களது முயற்சிகள் தொடர்கின்றன என்று கூறியுள்ளார் ஓ.ராஜகோபால்.

    பத்ம பூஷண் விருது

    பத்ம பூஷண் விருது

    மோகன்லாலை இழுக்க பாஜக என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவித்தனர். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன்லால் மோடி ஆதரவாளராகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு தனது பிளாக்கில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து எழுதியிருந்தார். மோடியை நேரில் சந்தித்த பின்னர் இதை எழுதினார்.

    வாய்ப்புகள் இல்லை

    வாய்ப்புகள் இல்லை

    ஆனால் நேரடியாக அரசியலுக்கு மோகன்லால் வருவாரா என்பது தெரியவில்லை. அப்படியே வந்தாலும் பாஜகவுக்குப் போவாரா என்பதும் தெரியவில்லை. தற்போதைய நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.

    மோகன்லாலை இழுத்து விட வேண்டும்

    மோகன்லாலை இழுத்து விட வேண்டும்

    ஏற்கனவே பிரதமர் மோடி 2 முறை கேரளாவுக்கு வந்துள்ளார். விரைவில் மீண்டும் வரவுள்ளார். அதற்குள் மோகன்லாலை இழுத்து விட வேண்டும் என்று தீவிரமாக முயல்கிறதாம் பாஜக. அப்படி நடந்தால் அடுத்து மோடி கேரளா வரும்போது அவருடன் மோகன்லாலும் மேடை ஏறுவார் என்கிறார்கள். ஆனால் நடக்குமா என்பதுதான் கேள்வி.

    English summary
    kerala BJP senior leader O Rajagopal has confirmed that his party is approaching Actor Mohanlal to join BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X